இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு அமமுக தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் பங்கேற்க உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இக்கண்டன ஆர்பாட்டத்தில் அந்தந்த கழக மாவட்டத்தைச் சார்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.