தமிழர்களை சீண்டி பார்த்தால் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆளுநரை மறைமுக தாக்கி பேசிய கனிமொழி..!

First Published Jan 19, 2023, 11:25 AM IST

தமிழர்கள் சாதாரணமாகத் தான் இருப்பார்கள் சுரண்டிப் பார்த்தால் தீங்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என ஆளுநரை கனிமொழி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். 

கியூபா புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. 
 

இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கோபண்ணா, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி: திமுக சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மறைந்த தலைவர்கள் இல்லாமல் வாழும் தலைவர்களில் யாரை சந்திக்க என்று கேட்டபோது, கலைஞர் முதலில் சொன்ன பெயர் பிடல் காஸ்ட்ரோ, அடுத்து சொன்ன பெயர் சேகுவாரா. இந்த இரண்டு தலைவர்களையும்தான் நான் சந்திக்க விரும்புகிறேன் என்றார். 

இன்றைய இளைஞர்கள் கூட தன் உடையில் சேகுவேராவின் படம் பொறித்த  சட்டையை அணிகிறார்கள். மற்றவர்கள் பேசக் கூடிய மொழி வேறு‌. அதில் மதம், திமிர் எல்லாம் இருக்கிறது. நம் மொழி சமத்துவம்தான். கிணற்றை காணோம் என்று சொன்னது போல ஆகிவிட்டது. நான் அப்படி சொல்லவே இல்லை, நான் சொன்னது  தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றெல்லாம் இங்கு எழுந்த புரட்சி தான் சொல்ல வைத்திருக்கிறது. சாதாரணமாக தமிழர்களை சீண்டி பார்த்தால் அவர்கள் அப்படியே இருந்துவிட மாட்டார்கள் என்பதற்கு சமீபத்தில் நாட்டில் நடத்திருப்பவைதான்‌ எடுத்துக் காட்டு என கனிமொழி கூறியுள்ளார்.

click me!