கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்..? SIT விசாரணைக்கு தடை கேட்கும் தவெக.. பரபர பின்னணி..!

Published : Oct 08, 2025, 01:52 PM IST

கரூரில் விஜய் பிரச்சாத்தில், ட்ரோன் காட்சிகள், அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கு 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இது எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு என்கிறார்கள் தவெக நிர்வாகிகள். 

PREV
14
ஜனநாயகனில் அரசியல்

விஜய், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவிட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்து வரும் விஜய், இப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பிரபல நடிகை பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்பாக இப்படத்தை இறக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுதான் தேதியை அறிவித்திருந்தனர். இப்படம் அரசியல் ரீதியான ஒரு கதையாக இருக்கும் என கூறப்படுகிறது

24
கரூரில் ஜனநாயகன் ஷூட்டிங்?

இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்ப்வம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார நிகழ்வில், விஜய் நடித்த ஜனநாயகன் பட படப்பிடிப்பு மறைமுகமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

34
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடைகோரும் தவெக

கரூர் துயர சம்பவத்தை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடைவிதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தவெக மேல் முறையீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்.ஐ.டி விசாரணைக்கு அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் தடைகேட்பதற்குப் பின்னணியில் இருப்பது ஜனநாயகன் பட ஷூட்டிங் அங்கு நடத்தப்பட்டதே காரணம் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

44
எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு?

திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக Arri Alexa 35 போன்ற சினிமாத்துறை கேமராக்கள் விஜயின் பிரச்சார வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அவை மேற்படி விசாரணையில் அம்பலமாகிவிடலாம் என்ற அச்சமே, விசாரணைக்குத் தடைகேட்க வைக்கிறது எனக் கூறுகிறார்கள்.

ஆனால், கரூரில் விஜய் பிரச்சாத்தில், ட்ரோன் காட்சிகள், அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கு 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இது எதிர்கட்சிகள் பரப்பும் அவதூறு என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories