2025 ஜூன் மாதம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தெரு, சாலைப் பெயர்களில் சாதி, சமூகப் பெயர்களை அகற்றும் அரசாணை பிறப்பித்தது. இது சமூகநீதி, சாதி ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு’ என்ற பெயரை அறிவித்ததும், ‘நாயுடு’ என்பது தெலுங்கு, கன்னட சமூகத்தின் கம்மவார், பலிஜா சாதிப் பெயராகக் கருதப்படுகிறது.
ஜி.டி.நாயுடு தெலுங்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது அரசின் சாதி-ஒழிப்பு கொள்கையுடன் முரண்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. திமுகவின் சமூகநீதி உறுதிமொழியை கேள்விக்குள்ளாக்கினர். தமிழர்களின் சாதிப் பெயர்களை அகற்றலாம். ஆனால் தெலுங்கர்களின் பெயரை வைக்கலாமா?" எனக் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘தேவர் , நாடார் , பிள்ளை , வன்னியர் , கவுண்டர் , முதலியார் , செட்டியார்னா எங்களுக்கு அலர்ஜி ! ரெட்டி , நாயுடு இன்ன பிற எங்களுக்கு ரொம்ப ஓகே ! நாங்க தான் தி பகுத்தறிவு பகலவன்ஸ் !! எவனும் கேள்வி கேக்க கூடாது !’’ என தெரிவித்துள்ளார். “"தமிழனுக்கு மட்டும் சாதிப்பெயர் இருக்கக்கூடாது, தெலுங்கனுக்கு இருக்கலாம்" என பலருன் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சிலர் "நாயுடு சாதி இல்லையா? ஜி.டி. என்று சுருக்கி வைக்கலாம்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.