கைது செய்திருக்க முடியாதா..? முதல்வரை சிறுமைப்படுத்த நினைத்தால் விஜய் சிறுமைப்பட்டுப்போவார்..! அப்பாவு எச்சரிக்கை..!

Published : Nov 06, 2025, 11:33 AM IST

41 பேர் இறந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் நடந்துகொண்ட முறையை உலகமே பாராட்டுகின்றது. சாமானிய மக்கள் வரைக்கும் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டார் எனச் சொல்கிறது. முதல்வரை சிறுமைப்படுத்த நினைத்தால் விஜய் சிறுமைப்பட்டு போவார்.

PREV
13

மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘‘ நம் குடும்ப உறவுகளை இழந்ததினால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இவ்வளவு நாளாக இருந்தோம். அப்படிப்பட்ட அந்த சூழலில் நம் சொந்தங்களின் பக்கம் இருக்க வேண்டியது நம்முடைய கடமை. அதனால்தான் அவர்களோடு சேர்ந்து அமைதி காத்து வந்தோம். ஆனால் இப்படி அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் இது மாதிரி நிறைய விஷயங்கள் நம்மை பற்றி பரப்பப்பட்டன. இது எல்லாவற்றையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு துடைத்து ஏரியத்தான் போகிறோம். அதற்கு முன் தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஓர் உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அரசியல் செய்ய விருப்பமில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடி சொல்கிற முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்வதன் வாயிலாக பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசும் முதல்வர் தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார்? என்பதையும் எப்படிப்பட்ட ஒரு அரசியல் செய்ய முயல்கிறார்? என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பாங்க? எனப்பேசினார்.

23

இதற்கு பதிலளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, ‘‘கரூரில் 41 பேர் இறந்ததுக்குக்கூட ஒரு நிமிஷம் நிற்காமல் அப்படியே சென்னை திரும்பி அவருடைய இல்லத்தில் போய் உட்கார்ந்து விட்டார் விஜய். நம்முடைய முதல்வர் தொலைநோக்கு பார்வை கொண்யவர். சிறுமைப்படுத்தும் எண்ணமோ, குறுக்கு எண்ணமோ, கொடூரமான எண்ணமோ அல்லது ஒருவரை தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணமோ இருக்காது. சிக்க வைக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்திருந்தால் 41 பேர் இறப்புக்கு கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள்.

33

ஒருபோது நம்முடைய முதல்வர் அப்படிப்பட்ட செயல்களில் அற்பமாக சிந்திக்கின்றவர் அல்ல. அவர் சொன்ன வார்த்தைகளை உலகமே போற்றுகிறது. எந்த அரசியல் கட்சித் தலைவரும் அவருடைய தொண்டர்களை அழைத்து வந்து அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள் அந்த அடிப்படையில் தான் இதை பார்க்கிறேன் என்று பெருந்தன்மையான வார்த்தையை சொல்லியவர். கடமையாக நினைத்து இரவு தூங்காமல் அந்த பாதிக்கப்பட்ட பல நூறு பேர்களுக்கு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கொடுத்து இறந்தவர்களுடைய உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்திற்கு நிதி உதவியும்கொடுத்தவர். 

41 பேர் இறந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் நடந்துகொண்ட முறையை உலகமே பாராட்டுகின்றது. சாமானிய மக்கள் வரைக்கும் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டார் எனச் சொல்கிறது. முதல்வரை சிறுமைப்படுத்த நினைத்தால் விஜய் சிறுமைப்பட்டு போவார். ஓடி ஒழிந்தவர் விஜய். அவர் முதல்வர் பற்றி பேசக்கூடாது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் அங்கே இருக்கிறவர்கள் நானும் ரவுடிதான்னு சொல்லி வடிவேல் சொன்ன மாதிரி பேசி இருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories