பாஜக கூட்டணியை வைத்தே அதிமுகவை முடிச்சிட்டாங்க..! திமுகவுக்கு தவெக மட்டுமே டார்க்கெட்..! ஆதவ் சொன்ன சூழ்ச்சி..!

Published : Nov 05, 2025, 03:08 PM IST

பாஜகவுடன் கூட்டணி வைத்ததைக் கூறியே அதிமுகவை திமுக முடிச்சு வைச்சிட்டாங்க. இப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டியே? யார் என்று இந்த தேர்தலில் பார்த்து விடலாம்

PREV
14

மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ‘‘ நாற்பதாவது நாள். முதல் 16 நாள் அவதூறுகள், பொய் பிரச்சாரங்கள், துரோகங்கள். சூழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத நம்மளுடைய கட்சி 30 வருஷமா இயக்கங்களால் இயக்கங்களாக மக்களோடு இருந்து இதை வழிநடத்தி இன்றைக்கு சூழ்ச்சின்னா என்னன்னு முதல்முறையாக கரூரில் பார்த்து, அந்த சூழ்ச்சியை எதிர்கொண்டு, இன்றைக்கு எந்த சூழ்ச்சி செய்தார்களோ அந்த திமுக இன்றைக்கு மக்கள் முன்பு ஒரு குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேசிப் பேசி வளர்ந்த கட்சி திமுக. முதல் முறையாக ஒரு மௌன புரட்சியை உருவாக்கி மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக 2026 இல் இந்த சூழ்ச்சியை தூக்கி எறிய கூடிய ஒரே தலைவர் எங்களுடைய தலைவர்.

24

குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்கள். ஆனால், இன்னைக்கு பெரிய பெரிய மாளிகை கட்டுவதற்காக குடிசைகளை தூக்கி எறிஞ்சிட்டு இருக்காங்க. அப்படி தன்னுடைய பயணத்தில் ஒரு கட்சி ஆரம்பிக்கணும், மக்களிடம் போகணும். மக்கள்கிட்ட போய் அரசியலுக்கு வந்து உங்களுக்கு நல்ல விஷயங்களை செய்வேன். பிரச்சாரத்தில் என்னென்ன தவறு நடந்து கொண்டு இருக்கிறது. நிர்வாகடததில் என்ன நடந்து கொண்டு ட்டு இருக்கிறது? தமிழக வெற்றி கழகம் வந்தால் நம்ம தோழர்களும், நானும் ஆட்சிக்கு வந்தால் என்ன நிர்வாக மாற்றங்கள் உருவாக்க முடியும் என மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள். தலைவர் மதுரை மாநாட்டில் சொன்னாரு. நீங்க எல்லாம் போயி ஒவ்வொரு வீடா மக்களோட சப்போர்ட் கேட்கிறீங்க. நான் ஆல்ரெடி எல்லோரது வீட்டுக்குள்ளேயும் போயிட்டு தான் மக்கள்கிட்ட வரேன் என்றார். இது உண்மை.

முன்பு திமுகவில் இருந்ததற்காக நான் பாவமன்னிப்பு கேட்கிறேன். எம்.ஜி.ஆருக்கு பிறகு தலைவர் விஜயைத்தான் சொல்கிறார்கள். அப்போது நாங்கள் பிறக்கவில்லை. ஒவ்வொரு சீனியர் தலைவர்களும் சொல்கிறார்கள். எம்ஜிஆர் இருக்கும்போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போது இருக்கிறது என்கிறார்கள். திருச்சி அரியலூர் என எங்கே சென்றாலும் மக்கள் கூட்டம் தானாக தேடி வருகிறது. பெரம்பலூரில் இருந்த மக்கள் 7 மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. 70 ஆயிரம் பேர். அதில் முக்கியமாக பெண்களும், குழந்தைகளும் இருக்கிறார்கள். அப்போது எஸ்பி சொல்கிறார் சார் ஒரு மணி ஆயிடுச்சு. இப்ப வந்த ஏதாச்சும் ஆகிவிடப்போகிறது எனத் துடிக்கிறார். தலைவரே நமக்காக 7 மணி நேரம் மக்கள் வெயிட் பண்றாங்களே. நம்ம போய் மூஞ்ச காமிச்சிட்டு வந்துருவோமே எனக் கேட்கிறேன்.ஆனால் காவல்துறை அனுமதி இல்லை.

34

அடுத்தது திருவாரூர் போனும் திருச்சியில் இருந்து கிளம்பி நாகப்பட்டினம் போனோம் நாங்க என்ன கேட்கிறோம் ஒரு நல்ல இடம். மக்கள் வரும்பொழுது அவர்களுக்கு ஒரு பாதுகாப்புகொடுங்க. எங்களை மிரட்ட வேண்டும் என நெனச்சீங்கன்னா அதுக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும் எனத் தெரியும். இன்னும் 6 மாதங்கள்தான். அடுத்து எங்கள் ஆட்சிடான்.உங்களுடைய தந்தை பிறந்த ஊர் திருவாரூர். பெரிய பெரிய கட்சி தலைவர்ளே திருவாரூர் போக மாட்டாங்க. ஆனால் இந்த அம்பது வருஷ வரலாற்று உடைச்சார். நீங்க ஏன் கருரூக்கு போனீங்கன்னு ஒருத்தர் நம்ம அட்வைஸ் சொல்றாங்க. கரூர் வந்து மோசமான ஏரியா. உங்களுக்கு தெரியாதா? அந்த செந்தில் பாலாஜி வந்து ஒரு ரவுடி பையன் என்பது உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்கிறார்கள். அவர் என்ன அவ்வளவு பெரிய ரவுடியா? பாஜகவுடன் கூட்டணி வைத்ததைக் கூறியே அதிமுகவை திமுக முடிச்சு வைச்சிட்டாங்க. இப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டியே? யார் என்று இந்த தேர்தலில் பார்த்து விடலாம்’’ எனப் பேசினார்.

44

கூட்டணி குறித்து பொதுக்குழுவில் பேசிய விஜய், ‘‘நிஜத்தில் இன்னிக்கி மக்களுக்கே இந்த கவர்மெண்ட் மேல இருக்கிற நம்பிக்கை மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து விட்டது. இதுவாவது முதல்வர் அவர்களுக்கு புரியுதா? புரியலைன்னா 2026 தேர்தல்ல இந்த திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமாக, அழுத்தமாக புரிய வைப்பாங்க. அப்ப கூட இவங்க என்ன பண்ணுவாங்க தெரியும்ல. அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டி பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை ஒண்ணு வெளியிடுவாங்களே. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படின்னு. அந்த அறிக்கை வெளியிட்டு போய் அறிவாலயத்துக்குள்ள ஓடி ஒழிஞ்சுக்குவாங்க. இப்பவே ரெடி பண்ணி வச்சிக்கோங்க. அந்த அறிக்கையை எப்படி மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம், நான் போன பொதுக்குழுவில் சொன்னது தான். இங்க நான் திரும்பவும் சொல்றேன். இயற்கையும், இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியை நம்ம கூடவே நிக்கும் போது என் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார்? தோழர்களே நமக்கு வந்திருக்கிற இந்த இடையூறு வெறும் டெம்ப்ரவரி மட்டும்தான். எல்லாத்தையும் தகர்த்தெறிவோம். மக்களுடன் கைகோர்த்து நிற்போம். மக்களுடைய களத்துல போய் நிற்போம். நம்ம பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பவும் சொல்றேன் 2026ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி. ஒண்ணு திமுக, இன்னொண்ணு தவெக. இன்னும் ஸ்ட்ராங்கா மாறப் போகுது. 100 சதவீதம் வெற்றி நமக்கே. வாகை சூடுவோம் வரலாறு படைப்போம்’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories