மனோஜ் பாண்டியன் ஏன் திமுகவில் ஐக்கியமானார் என விசாரித்ததில் ஓ.பன்னீர்செல்வத்துடன் மிக நெருக்கமாக பயணித்து வந்தவர். அவருடைய ஒரு முக்கியமான முகமாகவும் மனோஜ் பாண்டியன் இருந்தார். தர்மயுத்தம் தொடங்கி எல்லா காலகட்டத்திலும் உடன் இருந்தவர் மனோஜ் பாண்டியன். தொடக்கத்தில் இருந்த வேகம் கூட இப்போது சமீப நாட்களாக ஓபிஎஸிடம் இல்லை. ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டுக்கான மாற்று முகமாக தன்னை முன்னிலைப்படுத்திய ஓபிஎஸ் இன்றைக்கு அவருடைய தொகுதியிலேயே தாங்குவாரா? என்கிற நிலைக்கு சுருங்கிவிட்டார். அவருடைய செயல்பாடுகள் அந்தளவுக்கு சரியில்லை என்பது மனோஜ் பாண்டியன் எண்ணமாக மாறிவிட்டது.
சமீபத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பசும்பொன்னில் நடந்தது. அப்போது ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் எல்லோரும் ஒன்றாக குருபூஜை பங்கேற்றங்க சென்றபோது காத்திருந்து ஓபிஎஸ், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவை சந்தித்தனர். இதையெல்லாம் மனோஜ் பாண்டியன் தரப்பு ரசிக்கவில்லை. இது மனோஜ் பாண்டியனை ரொம்பவே வருத்தப்பட வைத்திருக்கிறது. அதிமுக ஒற்றுமையாக இருந்தபோதே சசிகலாவுடன் மனோஜ் பாண்டியன் தரப்புக்கு ஓட்டுதல் இல்லாமால், முட்டல், மோதல்கள் எல்லாம் இருந்து வந்திருக்கிறது. இதுதான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைய முக்கியக்காரணம் என்கிறார்கள்.