பல்லாயிரக்கணக்கான மக்கள் வெகு நேரம் காத்திருந்து விஜயின் பேச்சை கேட்க குழுமி இருக்கும்போது, ஆட்சியையே மாற்றப்போகிறேன். அடுத்து தவெக ஆட்சிதான் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மைக்கை கூட சரி செய்ய முடியாத விஜய் நாட்டை எப்படி சரி செய்யப் போகிறார்?
கோட் படத்தில், ‘‘கேம்பெயினை தான் தொறக்கட்டுமா..? மைக்கை கையில் எடுக்கட்டுமா..? எனப்பாடி இருப்பார் உங்கள் விஜய். ஆனால், சினிமாவில் அந்த மைக் கை கொடுத்திருக்கலாம். ஆனால், அவரது நிஜ அரசியல் கேம்பெயினில் மைக் பெருதும் மக்கர் செய்து வருவது தொடர் சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தொடங்கியது முதல் அவருக்கு மைக் தொல்லை கொடுத்து வருகிறது. திருச்சி பரப்புரையின்போது மைக் (மைக்ரோஃபோன்) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அங்கு விஜய் தனது பேச்சைத் தொடங்கியதும் மைக் தொடர்ந்து இடையூறு செய்தது. பெரிய பகுதியான கூட்டத்திற்கு அவரது குரல் தெளிவாகக் கேட்கவில்லை. கூட்டத்தினர் கைகொட்டி, கைகளை உயர்த்தி மைக் பிரச்சினையை விஜய்க்கு உணர்த்தினர்.
24
உங்களுக்கு கேட்கிறதா?
விஜய் தனது தயாரிக்கப்பட்ட குறிப்புகளைப் படித்தபடி பேசி முடித்தார். இரண்டு முறை "உங்களுக்கு கேட்கிறதா?" என்று கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்து "இல்லை" என்று பதில் வந்த பிறகும், அவர் பேச்சைத் தொடர்ந்தார். மைக்கை சரி செய்ய எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.
பெருந்திரளாக இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள், ஊடகத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முழுமையாக மைக்கால் பேரழிவாக மாறியது. பலர் விஜயின் பேச்சில் ஒரு சொல்லையும் கேட்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.
34
முதல்வரே... அச்சுறுத்த முயற்சி செய்கிறீர்களா?
செப்டம்பர் 20 அன்று நாகப்பட்டினத்தில் நடந்த அடுத்த பிரச்சாரத்தில், விஜய் இந்த மைக் கோளாறை திமுக அரசின் சதி என்று குற்றம் சுமத்தினார். ரோடு ஷோவின் போது மைக் சரியாக இல்லை என்று விஜய் திமுக வயரை வெட்டியதாகக் கூறினார். "முதல்வரே, என்னை அச்சுறுத்த முயற்சி செய்கிறீர்களா?" என்று மு.க.ஸ்டாலினை நேரடியாகக் கேட்டார். ஆனால், இதை விஜயின் தவறான குற்றச்சாட்டு என்று திமுகவினர் சாடினர். அது வயர்லெஸ் மைக் என்பதால் இதற்கு திமுக மீது தவறான குற்றச்சாட்டை சுமத்துவதாக பதிலடி கொடுத்தனர். சிலர் "ஆடியோ டிசாஸ்டர்" என்று விமர்சித்தனர்.
இன்று நாமக்கல் பிரச்சாரத்திலும் விஜய் பேசிக் கொண்டிருந்த போது மைக் இடையில் கட்டானது. லான் சில நிமிடங்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் பேசினார் விஜய். பல்லாயிரக்கணக்கான மக்கள் வெகு நேரம் காத்திருந்து விஜயின் பேச்சை கேட்க குழுமி இருக்கும்போது, ஆட்சியையே மாற்றப்போகிறேன். அடுத்து தவெக ஆட்சிதான் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில் மைக்கை கூட சரி செய்ய முடியாத விஜய் நாட்டை எப்படி சரி செய்யப் போகிறார்? என திமுக, அதிமுகவினர் நமட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர். மைக் டெஸ்டிங் 1..2..3.. ஆடியோ முக்கியம் பிகிலு ..! இப்போது மீண்டும் முதல் பாராவை படியுங்கள்..