SIR -க்குப் பிறகு தலைகீழ் மாற்றம்.! அதிக வாக்காளர்களைக் கொண்ட Top 5 மாவட்டங்கள் எது தெரியுமா? உங்க ஊரு இருக்கா?

Published : Mar 23, 2026, 04:44 PM IST

Highest voters district in Tamil Nadu : 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் SIR-க்குப் பின்னர் எந்தத் தொகுதிகள் அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

PREV
17
அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதிகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. பல முனைப் போட்டி நிலவுவதால் இந்த தேர்தல் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தலாக இருக்கிறது. இந்த தேர்தலில் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட 74 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மற்றும் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

27
SIR-க்குப் பிறகு

பிப்ரவரி 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட SIR-க்குப் பிறகு தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.77 கோடியாகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.89 கோடியாகவும், மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 7,617 ஆகவும் உள்ளது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம் ஆகும். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.99 லட்சம் பேர் உள்ளனர். 4.63 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் இடம் பெற்றுள்ளனர்.

37
திருவள்ளூர்

வாக்காளர் சீர்திருத்த பட்டியலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக திருவள்ளூர் விளங்குகிறது. இங்கு 15,44,710 ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 16,12,090, மூன்றாம் பாலினத்தவர் 613 என மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 31,57,413 ஆக உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

47
சென்னை

அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடம் பிடிக்கிறது. தற்போது 28,30,936 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 14,64,344, ஆண்கள் 13,65,763, மூன்றாம் பாலினத்தவர் 829 பேர் உள்ளனர். சென்னை மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அவை வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், ஆர்.கே நகர், கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க நகர், எழும்பூர், வில்லிவாக்கம், ராயபுரம் ஆகியன அடங்கும்.

57
சேலம்

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்ட பட்டியலில் சேலம் மூன்றாம் இடம் பிடிக்கிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 27,55,830 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 13,70,962 பேர் ஆண்களும், 13,84, 548 பேர் பெண்களும், 320 மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். சேலம் மாவட்டம் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஆத்தூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஓமலூர், சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சங்ககிரி, வீரபாண்டி, மேட்டூர், ஏற்காடு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

67
கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் மொத்தம் 26,96,813 வாக்காளர்கள் உள்ளனர். கோயம்புத்தூர் அதிக வாக்காளர்களை கொண்ட பட்டியலில் நான்காம் இடம் பிடிக்கிறது. இங்கு ஆண் வாக்காளர்கள் 13,00,889 பேரும், பெண் வாக்காளர்கள் 13,95,396 பேரும், 528 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். கோயம்புத்தூர் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சூலூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது.

77
மதுரை

தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மதுரை அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டங்களில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறது. இங்கு மொத்தம் 24,66,954 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12,08,651, பெண்கள் 12,58,051, மூன்றாம் பாலினத்தவர் 252 அடங்குவர். மதுரையில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், மேலூர், மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகள் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories