திமுக இழுபறி... அதிமுக அதிரடி..! – ஒரே நாளில் முடிந்த மெகா டீல்..! பாஜக, பாமக, அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்..?

Published : Mar 23, 2026, 04:15 PM ISTUpdated : Mar 23, 2026, 04:16 PM IST

திமுக கூட்டணி இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கும் போதே, அதிமுக கூட்டணி முன்கூட்டியே தொகுதிப் பங்கீட்டை முடித்திருப்பது அந்தத் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
அதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியில் நீடித்து வருகின்றன. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று (மார்ச் 23, 2026) ஒரே நாளில் தனது தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பியூஸ் கோயல் வருகை

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வருகை தந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தார். இந்தச் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

24
அதிமுக அலுவலகத்தில் டிடிவி தினகரன்

இந்தத் தொகுதிப் பங்கீட்டு நிகழ்வின் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் வருகை. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் அவர் முதன்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரை முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஜெயலலிதா நின்று கையசைக்கும் அந்தப் புகழ்பெற்ற பால்கனியில் நின்று தொண்டர்களை நோக்கி அவர் கையசைத்தது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

34
தொகுதிப் பங்கீடு விவரங்கள்

நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, கூட்டணியின் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுக + கூட்டணி (சிறு கட்சிகள்)178 (இரட்டை இலை சின்னம்) பாரதிய ஜனதா கட்சி 27, பாட்டாளி மக்கள் கட்சி 18, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 11. அதிமுக நேரடியாகப் போட்டியிடும் இடங்கள் போக, தமிழ் மாநில காங்கிரஸ் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் 'இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை விட, இந்த முறை கூட்டணி அமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த முறை 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, இந்த முறை 27 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த முறை 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, இந்த முறை 18 இடங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக, இந்த முறை 11 இடங்களுடன் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

44
திமுகவில் இழுபறி

திமுக கூட்டணி இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கும் போதே, அதிமுக கூட்டணி முன்கூட்டியே தொகுதிப் பங்கீட்டை முடித்திருப்பது அந்தத் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இந்த மெகா கூட்டணி, வரும் தேர்தலில் ஆளும் தரப்பிற்குப் பலத்த சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒன்றிணைந்த அதிமுக என்ற பிம்பமும், பாஜகவின் ஆதரவும் சேர்ந்து இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories