‘‘துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி’’ என டிடிவி.தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தபிறகு அதிமுகவில் புதிய புயல் வீச தொடங்கியுள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசியபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சேர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள். நடுரோட்டில்தான் நிற்பார்கள்’’ என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி முன்னுக்கு பின் முரணாகப் பேசுவது அவர் தோல்வி பயத்தில் இருப்பதன் வெளிப்பாடாகத் தெரிகிறது. உறுதியாக இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். அவருடன் கூட்டணியில் உள்ளவர்கள் தான் யோசிக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் உறுதியாக எடப்பாடி பழனிசாமியை பொதுமக்கள் புறக்கணிப்பார்கள்.