
அதிமுகவின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களை மீண்டும் இணைக்க 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சி பதவிகளிலிருந்து நீக்கினார் செங்கோட்டையன் ஏற்கனவே டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுக நிலவரம் குறித்துப் பேசியிருந்தார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். அவரது டெல்லி பயணம் அதிமுகவின் உட்கட்சி விவராகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அவரது டெல்லி விசிட் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ‘‘சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. சசிகலா ரூ. 450 கோடி கொடுத்து பினாமி பேரில் சுகர் ஆலை வாங்கிய வழக்கு 2017 போட்ட சார்ச்சீட்டுக்கு இப்போது அமலாக்கத்துறை உள்ளே வருகிறது. அதை ஏன் வெளியில் பாஜகவினர் கசிய விடுகிறார்கள் என்றால் சசிகலாவை லாக் செய்கிறார்கள் என்பதுதான் விஷயம்.
நாங்கள் நினைத்தால் எந்த வருட வழக்கையும் தோண்டுவோம் என அதிமுக தலைமை உட்பட அத்தனை முன்னாள் அமைச்சர்களுக்கும் கொடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மீதும் டெண்டர் வழக்குகள் உள்ளன. இப்போது அன்புமணியிடம் பாமக சின்னத்தை கொடுத்தது. எங்களுடன் இருக்கும் வரை தான் உங்களுக்கு சின்னம். நாங்கள் சொல்வதை மீறி போனால் உங்களுக்கு சின்னம் இல்லை என்கிற எச்சரிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆகையால் தான் எடப்பாடி பழனிச்சாமி வேறு வழி இல்லாமல் அமித் ஷாவை சென்று சந்திக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் சொந்தம் கிடையாது மற்றவர்களையும் கேட்டு இந்த கருத்தை முடிவு செய்ய வேண்டும் என எப்போதோ போடப்பட்டது அந்த வழக்கு. ஆனால் சமீபத்தில் போட்ட ராமதாஸ், அன்புமணி விவகாரத்தில் அன்புமணிக்கு தான் கட்சியின் சின்னமும் என முடிவாகிவிட்டது. ஆனால் இரட்டை இலை சின்ன வழக்கை ஏன் இவ்வளவு நாளாக எடுகவில்லை. அப்படியானால் பாஜக அதிமுக கூட்டணி நிரந்தரமாக இல்லை, 2026க்குள் என்ற மாற்றம் வேண்டுமானாலும் வரலாம். அதுவரை எடப்பாடி பழனிச்சாமியை பிடித்து வைக்க வேண்டும் என இரட்டை இலை சின்ன வழக்கை பாஜக பிடித்து வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
இது எடப்பாடி பழனிச்சாமியை அமித்ஷா நம்பவில்லை என்கிற வெளிப்பாடுதான் என்கிறார்கள். இவர் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு போய்விடலாம் என்கிற சந்தேகப் பார்வையுடனே பாஜக பார்க்கிறது. ஏனென்றால் 2024 தேர்தலில் பாஜகவுக்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை அமித் ஷாவுக்கு தெரியும். உங்களுக்கு முக்கியமான தேர்தலாக இருந்தால் என்ன? என்று எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து விட்டார். இப்போது பாஜக என்ன செய்கிறது என்றால் உனக்கு முக்கியமான தேர்தல் இப்போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என நினைக்கிறது.
இப்போது 2026 தேர்தல் பாஜகவுக்கு முக்கியமான தேர்தல் இல்லை என துக்ளக் குருமூர்த்தி முதல் நைனார் நாகேந்திரன் வரை அத்தனை பேரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அப்படியானால் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேலை செய்ய மாட்டோம் என்கிற சமிக்கையா? எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப உறுதியாக தனிப்பருமையுடன் ஆட்சி அமைப்போம் என்று சொல்லி வருகிறார். இப்போது இரட்டை இலை விவாகரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்தால் அவர் பாஜகவை எதிர்க்கக்கூடிய சூழ்நிலை எப்போதும் உருவாகும். இதற்கிடையில் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடு நடந்ததாகவும் தகவல் வருகிறது.
ஆனால் செங்கோட்டையன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சிக்கல் எடப்பாடி பழனிச்சாமிக்கு உருவாகியுள்ளது. இன்னொரு விஷயம் எடப்பாடி பழனிசாமி ஒருவரை தாஜா செய்வதற்காக செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி. தினகரன் ஆகியோரை இழப்பதற்கு பாஜக தயாராக இருக்குமா? என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் ஓட்டு வங்கி யார் அதிகமாக வைத்து இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே பாஜக விரும்பும். பாஜக தற்போது பல்வேறு விஷயங்களை கையாண்டு வருகிறது. வக்ஃபு விவகாரம், எஸ்ஐஆர் வழக்கு, பீகார் தேர்தல் என அடுத்தடுத்த விவகாரங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இந்த நிலையில் தமிழக அரசியலை பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என பாஜக நினைத்தால் எடப்பாடி பழனிச்சாமி கண்ட்ரோலுக்குள் வராமல் போய்விடுவார் என்கிற சந்தேகமும் பாஜகவுக்கு உள்ளது.
இப்போதைக்கு சமாதானப்படுத்தி அதிமுக பிரச்சனையை நிறுத்தி வைப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்து இருக்கிறது’’ என்கிறார்.