ஆனால், திமுகவினரோ பெரும் உற்சாகத்தில் உள்ளனர். திமுகவில் கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், வார்டு, பகுதி, மாவட்ட நிர்வாகிகள் வரை, அனைவருக்கும் தீபாவளி பரிசாக, தலா பத்தாயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. பகுதி பிரதிநிதிகள், துணைச் செயலர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், வார்டு செயலர், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.
பகுதி, ஒன்றிய, நகர செயலர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு உள்ளது. பரிசு பொருட்களாக பட்டு வேட்டி, பட்டு சேலை, பட்டாசு, இனிப்பு மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்களும் வழங்கி, கட்சியினரை ஆளும் கட்சித் தலைமை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.