இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைய மக்கள் நலத் திட்டங்களை தீட்டி, அதை முறையாக நிறைவேற்றி இருக்கிறது. சொல்லப்போனால் ஆட்சி வாயிலாக நிறைய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், எம்எல்ஏக்களும், தொகுதி பொறுப்பாளர்களும் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதனால் திமுக மீதான ஈர்ப்பு பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் திமுக தலைமை கண்டறிந்துள்ளது.
அதேபோல கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரவணைத்து செல்ல வில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுதும் உள்ளது. திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது? மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்? என்பதையெல்லாம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் கேட்டறியாமல் உள்ளனர். இதையெல்லாம் விரைந்து சரி செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.