பல பேரை நினைக்க வைக்கிற ஆட்களுக்கு அவர்களின் மனசக்தி அவர்களுக்கே போய்விடும். உங்களை எந்நேரமும் பத்து பேர் நினைக்கிறார்கள் என்றால் அது பெரிய எனர்ஜியை உங்களுக்கு கிடைக்க வைத்துவிடும். இப்போது கரூர் சம்பவத்தால் 500 கோடி பேர் விஜய் பற்றி நினைத்து இருப்பார்கள். ஹிட்லரை அப்படி நினைத்ததால் கடைசி வரை அவர் ஜெயிக்கவில்லை. கடைசியில் அவர் ஸ்டாலினிடமும், வின்ஸ்டன் சர்ச்சிலிடமும் சிக்கி இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவும், யுகேவும் வெற்றி பெற்றது.
நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு 15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து வந்து மார்ச் மாதத்துக்குப்பிறகு விஜய்க்காக வேலை செய்வார்கள். அவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு இங்கிருந்து வேலை செய்வார்கள். இங்கு வந்து அவரவர்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து வேலை செய்வார்கள். இது ஏன் நடக்கக் கூடாது? எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக நடக்கும். நான் அமெரிக்காவின் சன்பிரான்சிஸ்கோவில் நிறுவனம் வைத்துள்ளேன். அமெரிக்காவில் அங்கெல்லாம் போகிறபோது எனக்கு தெரிகிறது.