அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைகிறதா என்றால், தற்போதைய அரசியல் நிலவரப்படி இல்லை என்றே தெரிகிறது. தவெக நிர்வாகிகள் அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தெளிவாக மறுத்துள்ளனர். நேற்று நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசிய கூட்டத்தில் தவெக கொடிகள் தென்பட்டதை வைத்து, பெரிய கட்சி கூட்டணிக்கு வருகிறது.பிள்ளையார் சுழி போட்டாகி விட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தவெகவோ அது நாங்கள் அனுப்பவில்லை, அவர்களின் தவறான புரிதல்" என்று மறுத்தது.
எடப்பாடி பழனிச்சாமி , தவெக கொடிகளை கண்டு "கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது என்று சொன்னாலும், இது அதிமுகவின் தனிப்பட்ட கருத்தாகவே சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை எதிர்க்க, அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்த முயல்கிறது. ஏப்ரல் 2025-ல் அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. ஆனாலும், பாஜக-அதிமுக இடையே தொகுதிப் பங்கீடு, உள்ளார்ந்த பிரச்சினைகளே இன்னும் தீர்க்கப்படவில்லை.