விஜய்யிடம் அரை மணி நேரம் பேசிய EPS..! விரைவில் நேருக்கு நேர் சந்திப்பு..! உடையும் சஸ்பென்ஸ்..!

Published : Oct 09, 2025, 11:14 AM IST

கரூர் துயர சம்பவம் மூலம் திமுக கொடுக்கும் நெருக்கடி விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைத்துச் செல்லுமா? கொள்கை எதிரியுடன் கூட்டணி என்ற முடிவை நோக்கி விஜயநகர வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு சம்மதித்தால் விஜயின் பேர வலிமை எப்படி இருக்கும்?

PREV
15

கரூர் துயர சம்பவத்தை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை கொண்டுவர தீவிரமாக காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி விஜயிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் பேசியதாக தகவல் கசிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாக உறுதி அளித்த விஜய் கூட்டணிக்கு வருவது குறித்து ஜனவரிக்குப் பிறகு முடிவு சொல்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது,

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. கரூர் துயர சம்பவம் மூலம் மீண்டும் உலா வர தொடங்கி இருக்கும் நிலையில் அதிமுக தவெக கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற விவாதத்திற்கும் வழி வகுத்துள்ளது. தவெக தலைவர் விஜயின் அரசியல் வாழ்க்கையில் கரூர் துயர சம்பவம் இக்கட்டான சூழலை ஏற்படுத்டி இருக்கிறது. இத்தனை நாட்களாக விஜய் கட்சிக்கு இருந்த பிம்பத்தை அசைத்து பார்க்கும் வகையில் துயர சம்பவத்தை பயன்படுத்தி பாஜகவும், அதிமுகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

25

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்ததும் ஒட்டுமொத்த திமுகவினரும் விஜயை நோக்கி கேள்வி எழுப்பி வர, காவல்துறை மற்றும் அரசின் அலட்சியம்தான் 41 பேர் பலிக்கு காரணம் என பேட்டி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு பாஜகவும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஆய்வுக்கு அனுப்பியது. அந்த குழுவின் அறிக்கையிலும் பாதுகாப்பு குறைபாடுகள் தான் கரூர் துயரத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தது. அதோடு பாஜகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் விஜய்க்காக பரிந்து பேசினர். இவையெல்லாம் கூட்டணி கணக்கோடு தான் அரங்கேறுவதாக யூகித்த நிலையில் தான் விஜயிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக எடப்பாடி பழனிச்சாமி செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

திங்கட்கிழமை விஜய்யுடன் பேசிய எடப்பாடி பழனிச்சாமி முதலில் கரூர் விவகாரம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அதோடு 2026 தேர்தல் கூட்டணி குறித்தும் விஜயிடம், எடப்பாடி பழனிச்சாமி விவாதித்ததாக கூறப்படுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை சொல்லி எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைத்ததாகவும் கரூர் விவகாரத்தில் அதிமுக ஆதரவு முழுமையாக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அவர் பேசியதை கேட்டுக் கொண்ட விஜய் கூட்டணி தொடர்பான பேச்சுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

35

அதாவது கூட்டணி தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காத விஜய் தற்போதைக்கு கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேச வேண்டும் என்பதே தன்னுடைய முழு நோக்கமாக இருக்கிறது என ஈபிஎஸிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய பின்னர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாக விஜய் உறுதி அளித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

45

கூட்டணி குறித்து ஜனவரிக்கு பிறகு முடிவை சொல்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்த போது விஜயிடம், எடப்பாடி பழனிசாமி செல்போனில் பேசியது உண்மைதான் என்கிறார்கள். கரூர் துயர நிகழ்வு மூலம் தவெக கட்டமைப்பிலும் பின்னடைவு ஏற்பட்டு எல்லாம் சரி செய்துவிட்டு கூட்டணி குறித்த முடிவை எடுக்கலாம் என்ற மனநிலையில் விஜய் இருப்பதாக சொல்கிறார்கள். பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்த விஜய், கட்சி தொடங்கியதில் இருந்தே அதிமுகவை விமர்சிக்காமல் இருந்தார். அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆரை அடிக்கடி புகழ்ந்து பேசும் விஜய் எம்ஜிஆர் 1977 தேர்தலில் திமுகவை வீழ்த்தியது போல் வெற்றி பெறுவேன் என்று கூறித்தான் மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்த விஜய், மதுரை மாநாட்டில் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி தற்போது யார் கையில் இருக்கிறது என்பது தெரியுமா? என எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமையை விமர்சித்து பேசினார். அதோடு கரூர் துயர நிகழ்வு நடந்த அன்றைய தினமே முன்பு நாமக்கல்லில் பேசிய விஜய், அதிமுக, பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை எம்ஜிஆர் தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூட விஜய் பேசினார். ஆனால் கரூர் துயர நிகழ்வு கொடுத்த நெருக்கடி விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

55

பாஜக, அதிமுக கூட்டணி உறுதியாகும் முன்பே அதிமுகவும், தவெகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், கூட்டணிக்கு யார் தலைமை? யார் முதல்வர் வேட்பாளர்? யாருக்கு எவ்வளவு தொகுதிகள்? என பேச்சுவார்த்தை நடந்த பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் போனது. இதனிடையே அவசர அவசரமாக அமித் ஷா சென்னைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யவே அதற்கு மேல் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நின்று போனது. கரூர் துயரம் மூலம் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கட்டமைப்பு பலமாக இருக்கும் அதிமுக மாதிரியான கட்சியுடன் விஜய் கூட்டணிக்கு செல்வது அவருக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், பாஜக இருக்கும் அணியில் சேர விஜய் முடிவு செய்வாரா? என்பதும் கேள்வியே.

ஆனால், கரூர் துயர சம்பவம் மூலம் திமுக கொடுக்கும் நெருக்கடி விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைத்துச் செல்லுமா? கொள்கை எதிரியுடன் கூட்டணி என்ற முடிவை நோக்கி விஜயநகர வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு சம்மதித்தால் விஜயின் பேர வலிமை எப்படி இருக்கும்? கரூர் நிகழ்வு காரணமாக தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற இடத்தில் சமரசம் செய்து கொள்ள விஜய் தயாராகி விட்டாரா? என்ற கேள்விக்கெல்லாம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு தெளிவாக தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories