இந்த நிலையில் ராமதாசை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டாம் என விசிகவினரே திமுகவிடம் நேரடியாக சொல்லி வருகிறார்கள். ராமதாஸுடன் கூட்டணி வைத்தால் விசிக தொடர்களுக்கு கோபம் வந்துவிடும். விசிகவும், பாமகவும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் விசிக தொண்டர்களுக்கு கோபம் வந்துவிடும். விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது ஏற்கனவே அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக மீது தொண்டர்களுக்கு அதிருப்தியில் தவெக பக்கம் தாவுவதற்கு வாய்ப்பாக அமையும் என விசிக நிர்வாகிகள் நினைப்பதாக பேச்சு அடிபடுகிறது.
விசிக தொண்டர்கள் கட்சி மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என நினைத்து ராமதாசை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டாம் என விசிக தெளிவாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் திமுக தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதைவிட ராமதாஸ் எங்கே போகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.