நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையின் போது திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திமுகவை அட்டாக் செய்தார். இது தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக முழுமையாக தீவிரமாக உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதற்கெல்லாம் மத்தியில், அண்ணாமலையின் பங்கு குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபினை நியமிப்பதன் மூலம் பாஜக அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக இளைஞர்களை முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை புதிய பாஜக தலைவர் நிபின் பதவிக்கு அடுத்து, பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். அண்ணாமலைக்கு பெரும் பதவி கொடுப்பது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நிச்சயமாக பயனளிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்ணாமலைக்கு 41 வயதுதான், நிதின் நபினுக்கு அடுத்து முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது உறுதி என்கின்றனர் டெல்லி பாஜக தலைவர்கள்.