செங்கோட்டையனின் செல்வாக்கு ஈரோடு, தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், அவரால் கட்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என சிலர் கருதுகின்றனர். ஆனாலும், தேர்தலில் தோல்வி ஏற்பட்டால், எடப்பாடிக்கு எதிரான குரல்கள் வலுப்பெறலாம்.
இந்த மோதல், அ.தி.மு.க.வின் உட்கட்சி டைனமிக்ஸையும், எடப்பாடியின் தலைமைக்கு எதிரான அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது. செங்கோட்டையனின் கெடு நிறைவேறாவிட்டால், கட்சியில் மேலும் பிளவுகள் ஏற்படலாம். எனவே, செங்கோட்டையனின் நிலைப்பாடு எடப்பாடிக்கு அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது. செங்கோட்டையனின் கெடுவை ஏற்க முடியாமலும், அவரை நீக்க முடியாமலும் திக்கித்திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை எளிதாகவும், விஜய் தன் கட்சியை வலுப்படுத்தவும் தக்க தருணமாக மாறி வருகிறது.