2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவோடு சேர்ந்து சபரீசனின் பென் அமைப்பும் மிகத் தீரமாகக் களமிறங்கி விட்டது. தேர்தலுக்கு இருக்கும் சிறிய இடைவெளி காலத்திற்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியை பற்றிய சர்வே, டேட்டா அனலிஸ்ட், அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகள், திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? போன்ற பல்வேறு விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுப்பதுதான் பென் அமைப்பில் இருக்கக்கூடிய பீல்ட் டீமின் முக்கியமான வேலை.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பீல்ட் டீம் இயங்கி வருகிறது. அதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் களத்தில் என்ன நடக்கிறது? திமுகவுக்கு சாதகமாக என்ன நடக்கிறது? பாதகமாக என்ன நடக்கிறது? திமுக சட்டமன்ற உறுப்பினர் அங்கு எப்படி செயல்படுகிறார்? அவருக்கும், திமுக கட்சியினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், இருக்கக்கூடிய இணக்கம் எப்படி உள்ளது?அவர்களுக்கும், மக்களுக்கும் இடையில் தொடர்பு எப்படி இருக்கிறது? அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அவர்களுக்கு சாதி செல்வாக்கு எப்படி இருக்கிறது? அவர்களுக்கு சொந்த செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்று பல்வேறு வகைகளில் அந்தந்த நேரத்தில் சர்வே எடுத்து அந்த ரிப்போர்ட்டை பென் அமைப்புக்கு கொடுக்க வேண்டியது இதுதான் அந்த ஃபீல்டு டீமின் வேலை.