அடுத்து உழைக்கும் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய, வட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், பட்டியல் சமூகத்தினர், இன்னொரு பக்கம் வன்னியர் சமூகத்தினர், அடர்த்தியாக உழைக்கும் மக்கள் இருக்கக்கூடிய தொகுதிகள், சிறுபான்மையினர் முக்கியமாக இருக்க வேண்டும் என பல விஷயங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இந்த வகையில் விஜய் தனக்கு தோதான வாய்ப்பு இருக்கிற மாதிரி ஒரு பத்து தொகுதிகளை தொடக்கத்தில் இருந்தே லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்.
விஜய் அப்போதே நம்முடைய தொப்புள் கொடி உறவுகள், தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு நான் நாகப்பட்டினம் வந்து இருகிறேன். இங்கே மக்களுக்காக பேசி இருக்கிறேன் என அதையும் தொட்டு பேசினார். அவருடைய இந்த பயணத்தில் தன்னை தமிழ்நாட்டுக்கான அடையாளப்படுத்துதல், இன்னொரு பக்கம் மீனவன் நண்பன், சிறுபான்மையினர், அனைத்து சமுதாயத்தினருடைய நலன், மதச்சார்பின்மை என பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி தனது பரப்புரை பயணத்தை முன்வைத்து இருக்கிறார்.