மூணு நாள் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்று தவெக தொண்டனின் தாலியை அறுத்து, அவன் வீட்டில் உள்ள நகையை எடுத்து அடமானம் வைத்து 2000 ரூபாய்க்கு டிக்கெட் வித்து அந்த பணத்தில் ஏசி பஸ்ல போறவன். ஒரு ஷேர் ஆட்டோவில் சேஸ் எக்ஸ்ட்ரா வைத்தால் கேஸ் போடுறானா? இல்லையா?
திமுகவின் முன்னாள் தலைமைக்கழக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறந்தாலே வக்கிர வார்த்தைகள் கூவம் போல நுரை ததும்பும். அவர் அரசியல் மேடைகளில், கட்சித் தலைவர்கள், பெண் அரசியல்வாதிகளை டார்க்கெட் செய்து வக்கிரமான, இழிவான, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளில் பேசியதால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இது அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, கட்சியின் பிம்பத்தையே கேள்விக்குறி ஆக்கியுள்ளன.
இந்நிலையில் கடலூரில் விஜய் குறித்துப்பேசிய அவர், ‘‘நேத்து பேஞ்ச மழையில... நல்ல வாயில வருது. அந்த பையன் இங்க வந்தானா? என்ன சொன்னான்..? போக்குவரத்துறை மந்திரியாக இருக்கிறார். அவர் ஊர்ல பஸ் நல்லா இல்ல. என்ன நைனா இது? திரிஷா மாதிரியே பஸ் விட முடியுமா? பஸ்ல போறதுக்கு கால் வலி, முட்டி வலி. நைனா எங்களுக்கு சொகுசு பேருந்து குடுங்க என்று எங்கள் அண்ணனிடம் கேட்டோம். அடக்கமா பேட்டரி பஸ் விட்டு இருக்கிறாரா இல்லையா? பஸ்ஸில் ஏறினால் பொத்துன்னு போய் உட்கார்ந்து கொள்ளலாம்.
24
ஊர் தாலி அறுத்தவனே...
இதில் என்ன வேடிக்கை என்னென்னா அந்த பையனுக்கு (விஜய்க்கு) எழுதிக் கொடுக்கிறவன் கஞ்சா அடிக்கிறவன். கஞ்சா அடிக்கிறவன் எழுதிக் கொடுத்தத சரக்கு அடிக்கிறவன் அப்படியே பேசுகிறான். இதுதான் அவனுக்கு தெரிந்தது. உலகமே தெரியவில்லை. உன் தவெகவுக்கு திமுகவுடன் போட்டியா? டேய்... எங்க அண்ணன் நடந்து போனார் என்றால் உதிரும் ... (ரோமம்) கூட நட்டுக்கொண்டுதான் கீழே விழும். நாங்கள் வந்து கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருக்கிறோமா? அவர் உழைத்து சம்பாதிக்கிறாராம். போட... ஊர் தாலி அறுத்தவனே. பத்து ரூபாய் டிக்கெட்டை 2000 க்கு விற்ற படுபாவி அவன்.
34
அவ்வளவு நீளம் இருக்கலாமா?
ஃபர்ஸ்ட் மூணு நாள் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்று தவெக தொண்டனின் தாலியை அறுத்து, அவன் வீட்டில் உள்ள நகையை எடுத்து அடமானம் வைத்து 2000 ரூபாய்க்கு டிக்கெட் வித்து அந்த பணத்தில் ஏசி பஸ்ல போறவன். ஒரு ஷேர் ஆட்டோவில் சேஸ் எக்ஸ்ட்ரா வைத்தால் கேஸ் போடுறானா? இல்லையா? அவ்ளோ பெரிய பஸ்ஸில் என்னடா பண்ண போற. ஒரு ஆள் தானே போற.எதுக்கு இவ்வளவு பெரிய சைஸ். தயவு செய்து சொல்கிறேன். அவன் எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். சமத்துவம், சகோதரத்துவம் எல்லாம் வேண்டாம். அவன் பஸ்ஸை சோதனை செய்யணும். ஆர்டிஓ ஆபீஸ்ல சொல்லுங்கள் நீளம் பெரிசா இருக்கு. அவ்வளவு நீளம் இருக்கலாமா?
நான் திமுகவில் காலங்காலமாக உழைக்கிறேன். என் வண்டி நம்பர் பிளேட்டில் கருப்பு சிவப்பில் ஸ்டிக்கர் ஒட்டினால் கேஸ் போடுகிறான். அவனுக்கு மட்டும் என்ன பர்மிஷன். வண்டி சைஸை குறைக்க சொல்லுங்கள். சந்தில் திரும்ப முடியவில்லைனு அவன் வேற சொல்கிறான். என்னை சந்து வந்தாக கூட்டிப் போகிறீர்கள் என்று அவன் புலம்புறான். நல்லா பீச் ரோட்டை தான் திறந்து விடுங்களேன். சனிக்கிழமை சனிக்கிழமை மக்களை சந்திக்கப்போறன்னு கேட்டா இதுதான் ஹைலைட்டே. யாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாதுன்னு சனிக்கிழமை சாயங்காலமா வருகிறானாம்.
நாங்கள் நல்ல விஷயமா சொல்கிறோம். இந்த இந்தி உள்ளே நுழைந்து, தமிழை காப்பாற்றுவதற்கு பல பேர் தீக்குளித்து செத்த கட்சி. சும்மா சீன் போடுற கட்சி இல்லை’’ என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தவெக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.