CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!

Published : Jun 08, 2026, 02:21 PM IST

ஆரம்பத்தில் எளிமையான மர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த முதல்வர் விஜய், அதுகுறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது 'பாட்ஷா' ஸ்டைல் அதிநவீன சொகுசு சேருக்கு மாறியுள்ளார். இதற்கான காரணம் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.

PREV
14
நேர கட்டுப்பாடு, எளிமையான அணுகுமுறை

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார் த.வெ.க தலைவர் விஜய். கடந்த 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்று, சட்டசபையில் தன் பெரும்பான்மையையும் நிரூபித்த அவர், தற்போது பம்பரமாகச் சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார்.

காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடும் அவர், மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்கிறார். மதிய உணவிற்காகக் கூட வீட்டிற்குச் செல்லாமல், கொண்டு வரும் உணவை அங்கேயே முடித்துவிட்டு உடனே அடுத்த பணிகளுக்குத் தயாராகி விடுகிறார். இவரின் இந்த நேரக் கட்டுப்பாடும் எளிமையான அணுகுமுறையும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

24
சர்ச்சை கிளப்பிய அந்த மர நாற்காலி!

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் ஒரு சாதாரண மர நாற்காலியில்தான் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 2-ஆம் தேதி தென்னிந்தியப் பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது அரசு வெளியிட்ட புகைப்படத்தில், ராணுவத் தளபதிக்கு இணையாக முதல்வர் விஜய் அந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சி வெளியானது. "முதலமைச்சர் அறைக்கு இந்த நாற்காலி பொருத்தமானதா?" என அரசியல் வட்டாரங்களில் இது விவாதப் பொருளாகவும், சில விமர்சனங்களுக்கும் ஆளானது.

34
பாட்ஷா ஸ்டைலில் ‘மாஸ்’ என்ட்ரி கொடுத்த அதிநவீன சொகுசு சேர்!

இந்நிலையில்,  தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மணிகுமார், முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பாக அரசு வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் அப்படியே ஆடிப்போயுள்ளனர்!

விஜய்யின் அறையில் இருந்த அந்தப் பழைய மர நாற்காலி மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாகப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக, 'பாட்ஷா' பட ரஜினி ஸ்டைலில் செம கெத்தாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன சொகுசு குஷன் சேர் அங்கு இடம் பிடித்துள்ளது. அதில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கும் லுக் சமூக வலைதளங்களில் மரண மாஸாக வைரலாகி வருகிறது.

44
மாற்றத்திற்கான காரணம் என்ன?

தினமும் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்து தொடர்ந்து முதல்வர் விஜய் கோப்புகளைப் பரிசீலித்து வருகிறார். இதனால் அவருக்கு லேசான முதுகு வலி (Back pain) ஏற்பட்டதாம். நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற ஏதுவாக, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், முதுகுக்கு நல்ல பிடிமானம் தரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த அதிநவீன குஷன் சேர் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எளிமை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரும் நாற்காலி "கெத்தாக" இருக்க வேண்டும் என்று விரும்பிய அவரது தொண்டர்களுக்கு, இந்த புதிய 'சொகுசு குஷன் சேர்' படம் பெரும் குஷியைக் கொடுத்துள்ளது!

Read more Photos on
click me!

Recommended Stories