விசிக தலைவரான தொல்.திருமாவளவன், முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய தோழமையாளராகவும், திமுக-விசிக கூட்டணியின் முக்கிய தலைவராகவும் இருந்து வருகிறார். அவர் ஸ்டாலினை அடிக்கடி பாராட்டி, அவரது ஆட்சியை தமிழ்நாட்டின் சமூகநீதி, முன்னேற்றத்தின் சின்னம் எனப் புகழ்கிறார். ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு இதற்கு சிறந்த உதாரணம். அங்கு அவர் ஸ்டாலினை "இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக" புகழ்ந்தார்.
"மீண்டும் இந்த மண்ணில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்" என்று தெளிவாக அறிவித்தார். ஸ்டாலின் ஆட்சியை "ஒட்டுமொத்த தேசத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்கும்" என்று கூறி, தனது கட்சியின் முழு சப்போர்ட்டையும் உறுதிப்படுத்தினார்.
திமுக காரான் தோற்றான் என்கிற அளவுக்கு கூட்டணிகட்சியாக இருக்கிறோம் என்பதையும் மறந்து பல நேரங்களில் ஸ்டாலினையும், அவரது செயல்பாடுகளையும் உயர்த்திப்பிடித்து வருகிறார் என்கிற விமர்சனம் திருமாவளவன் மீது வைக்கப்படுகிறது.