‘‘தவெகவினர்களே, இக்கட்டான பெருந்துயர சூழலில் உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அண்ணன் சீமான். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை வைத்து தரம்தாழ்ந்த அரசியலை என்றைக்கும் செய்ய மாட்டார். சீமானை வெட்டுவேன், குத்துவேன், அவன் செத்துபோயிடுவான், அவன், இவன் என்று ஆபாசமாகவும் மரியாதைகுறைவாகவும் பேசிய விஜய் ரசிகர்களே! விஜய் இருக்க வேண்டிய இடத்தில் அண்ணன் சீமான் தான் நிற்கிறார். சீமான் சாகணும், சீமான் ஒழிக, சீமான் அழிஞ்சி போயிடுவான்... நாம் தமிழர் கட்சி அழிஞ்சி போயிடும் என எவ்வளவு வசை சொற்கள்?
கடைசியில் அவர் மட்டும்தான் கூட இருப்பார் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். சீமானுடன் நிறைய கருத்து வேறுபாடு இருந்தாலும், விஜய்க்கு எதாவது ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக சீமான் தான் குரல் கொடுக்கிறார். போதிக்க வேண்டிய நேரத்தில் கோவமாக போதிப்பார். கூட நிற்க வேண்டிய நேரத்தில் அன்புடன் கூட நிற்பார். அது தான் அண்ணன் சீமான்.