இந்நிலையில், சீமானின் பாரதி பற்றிய உரையை புகழ்ந்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ‘‘பாரதியாரை பற்றி சீமான். கேட்கவேண்டிய அபாரமான உரை. பாரதியாரை ஏற்ற தமிழ் தேசியம் பாரதி பாடிய சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தின் அங்கம். தமிழைத் திருடிய திமுகவுக்கு பெரும் சவால் சீமான்’’ என வானளாவப் புகழ்ந்து இருந்தார். இந்நிலையில், "சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் நாம் தமிழர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கருத்தரங்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்தி செயல்படுகிறது. சீமான் பாரதியாரை தமிழர் வரலாற்றின் மகத்தான கவிஞராகவும், தமிழ்நாடு என்ற பெயரை முதலில் கருத்தியல் ரீதியாக வைத்தவராகவும் போற்றுகிறார். அதேநேரம், பெரியாரின் திராவிட இயக்கக் கொள்கைகளை குறிப்பாக தமிழ்-சமஸ்கிருத உறவு, மதம், சாதி சீர்திருத்தம் குறித்த சில கருத்துகள் தமிழர் ஒற்றுமைக்கு எதிரானவை என்று விமர்சிக்கிறார்.
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் இந்த கருத்தரங்கம் பாரதியாரை மையப்படுத்தி, பெரியாருக்கு எதிரான விவாதங்களை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.