விஜய்யின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கரூர் மாவட்டத்தில், 400-க்கும் மேற்பட்டோர் தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.
2024-இல் தொடங்கப்பட்ட நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஒரே வருடத்தில் வேகமாக வளர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது அணியாக உருவெடுத்து வருகிறது. பல மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இளைஞர்கள், முதல்தடவை வாக்களிப்போர் ஆகியோரிடம் ஆதரவு பெருகி வருகிறது.
தவெகவின் செல்வாக்கு தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களிடையே ‘மாற்றம்’ எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் விஜய்யுடன் இருந்து முடிவுகளை எடுப்பது தவெகவுக்கு பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.