விடாமல் துரத்திய வழக்குகள்! அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் ஓபிஎஸ், ரவீந்திரநாத்..!

First Published | Jul 28, 2023, 6:27 AM IST

வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத்தும், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது வேட்புமனுக்களில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மிலானி என்பவர் தேனி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

Latest Videos


இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்புமனுக்களில் சொத்துக்கள் மற்றும் கல்வி விவரம் குறித்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக மிலானி என்பவரது புகாருக்கு ஆதரவாக எந்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகிய இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். 
 

click me!