மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, லேப்டாப்புக்கு ஓராண்டு, வாரண்டி சலுகை உள்ளது. அதைப் பெற வேண்டுமானால், லேப்டாப் மேற்புறம் உள்ள புகைப்படம் கட்டாயம் இடம்பெற்று இருக்க வேண்டும்.
தமிழக அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்கியது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் லேப்டாப்பை வாங்கிய கையோடு அந்த புகைப்படங்களை அழித்துவிட்டு தங்களுக்கு விருப்பமானவர்களின் ஸ்டிக்கர் ஒட்டுவதை பலர் செய்ய தொடங்கினர்.
தமிழக அரசு சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு, இலவசமாக மடிக்கணினியை வழங்கும் பணியை, கடந்த 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். லேப்டாப்பின் மேல் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் அச்சிடப்பட்டு இருக்கிறது.
24
ஸ்டாலின் - கருணாநிதி படங்கள் அழைப்பு
இந்த புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பதை விரும்பாத சில மாணவர்கள், அவற்றை தின்னர் போட்டு அழித்துவிட்டு, தங்களுக்கு பிடித்தவர்களின் படங்களை ஒட்டி சமூக வலைதளங்களில் வீடியோக்களாகப் பதிவேற்றி வருகின்றனர். இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது, லேப்டாப்பில் மேற்புறம் உள்ள படத்தை நீக்கினால், மாணவர்கள் லேப்டாப்பிற்கான வாரண்டிக்கான பழுது நீக்குவதற்கான உத்தரவாதத்தை பெற முடியாது என எல்காட் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
34
வாரண்டியை பெற முடியாது
இது குறித்து, அவர்கள் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, லேப்டாப்புக்கு ஓராண்டு, வாரண்டி சலுகை உள்ளது. அதைப் பெற வேண்டுமானால், லேப்டாப் மேற்புறம் உள்ள புகைப்படம் கட்டாயம் இடம்பெற்று இருக்க வேண்டும். அதில் உள்ள சீரியல் எண் இருந்தால் மட்டுமே பிரச்னை இல்லாமல் சர்வீஸ் செய்து கொடுக்க முடியும். இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அரசு வழங்கும் வாரண்டியை பெற முடியாது’’ என கூறுகின்றனர்.
பொதுவாக ஒரு பொருட்களுக்கு உற்பத்தியாளர்களே நேரடியாகவோ அல்லது டீலர்கள் மூலமாகவோ வாரண்டி வழங்குவது வழக்கம். ஆனால், தமிழக அரசு வழங்கிய லேப்டாப்களுக்கான வாரண்டி குறித்து, அதனை தயாரித்த எச்பி அல்லது டெல் அல்லது லெனோவா ஆகிய நிறுவனங்கள் தான் முடிவு கூற வேண்டும். வாரண்டி குறித்து எல்காட் கூற முடியாது. வாரண்டிக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உற்பத்தியாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.