காவிரி பிரச்சனை- அமளி கிளப்பும் எதிர்கட்சிகள்
தமிழகத்தில் தொடர் கொலை, கொள்ளை நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்திருப்பதாகவும் அதிமுக, பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் உரிய முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தராத காரணத்தால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக, பாஜக பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.