கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் சீனியர்கள் பலர் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ, எம்.பி.க்கள் பலர் போட்டியிடத் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருக்கிறது.
இது குறித்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘மெகா கூட்டணி’ அமைப்பேன் என்று சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி அதை அமைக்கத் தவறிவிட்டார். தவிர, அதிமுகவில் உள்ள சீனியர்களே தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டிய நிலையில், ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை யார் கொடுத்தார்களோ அவர்களுக்கு சீட்டைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்படியும் யாரும் வெற்றி பெறவில்லை. பல வேட்பாளர்கள் இன்னும் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.