போலி வாக்காளர்களை வைத்துதான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா..? ஆதாரங்களை அடுக்கும் நிர்மலா சீதாராமன்..!

Published : Nov 11, 2025, 05:16 PM IST

கொளத்தூரில் 913 பேர் போலி முகவரியில் இருக்கிறார்கள். இதை வைத்து தான் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியுமா? எல்லாம் நீக்குவதற்கான பெயர் தான் எஸ்ஐஆர்.

PREV
13

SIR பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்றால் என்னவென்றே தெரியவில்லை. கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் உள்ளனர். அப்படியானால் போலி வாக்காளர்களை வைத்துதான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா?’’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் குறித்து கோயம்புத்தூரில் விளக்கிய நிர்மலா சீதாராமன், ‘‘இவிஎம் சரியில்லாததனால்தான் கட்சிகள் தோற்கின்றன என ராகுல் காந்தி குற்றச்சாட்டும் அதே வழியில் இவிஎம்மில் குறை இருக்கிறது என்கிறார்கள். ஆனால், இமாச்சலப் பிரதேசத்தில் ஜெயித்தார்கள். அப்போதெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி இல்லை. ஆனால், எதிர்க்கட்சியோ, பாஜகவோ ஜெயித்து விட்டால் அது இவிஎம்மில் குறை, அந்த வாக்கு செல்லுபடி ஆகாது என்கிறார்கள். ஆகையால் அதிலிருந்து வெளிவந்து அடுத்ததாக என்ன சொல்கிறார்கள்? அமலாக்க துறையை அரசியல் ரீதியாக உபயோகிக்கிறீர்கள். அது கூடாது என எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

23

அமலாக்கத்துறையை வைத்து சர்வே செய்கிறீர்கள், சோதனை செய்கிறீர்கள், நீதிமன்றத்திற்கு இழுக்கிறீர்கள் என்கிறார்கள். அதையும் உச்ச நீதிமன்றம் மூலம் திருப்பி திருப்பி இல்லை வழக்கு வந்திருக்கிறது சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் பணம் வசூலிப்பதற்கு எதிரான அமைப்பது சொல்கிறது அமலாக்கத்துறை கையில் எடுக்கும் வழக்குகளால் தான் நிறைய மோசடி செய்தவர்களின் சொத்துக்களை அபகரித்து எடுத்துக் கொண்டு அதை ஏலத்தில் விட்டு அதிலிருந்து வரக்கூடிய பணத்தை எங்கே கடன் வாங்கி ஏமாற்றினார்களோ அந்த வங்கிகளுக்கு திரும்பி போய் சேர்க்கப்பட்டது என்கிறது. அது உலக அளவில் பாராட்டப்படுகிறது. தாங்கள் செய்த குற்றங்களை மறைப்பதற்காக அமலாக்கத்துறை சோதனை, சிபிஐ சோதனை, வருமானவரித்துறை எங்கள் மீது வருகிறது என்றெல்லாம் கதை சுற்றுகிறார்கள்.

ஒரு இடத்தில் கூட வருமானவரித்துறை சோதனை தப்பாகவில்லை. கோடியாக கோடி கோடியாக வைத்திருந்த பணமும், தங்கமும், இல்லாத சொத்துக்களும் வெளியில் வருகிறது. ஆகையால் அதைக் கண்டால் இவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் இப்போது அவர்களது அடுத்த குறி எஸ்ஐஆர். தவறு இங்கே வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 13 முறை எஸ்ஐஆர் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் எதுவும் சொல்லவில்லை. இப்போது திடீரென வருகிறார்கள். வரப்போகிற தேர்தலில் தோல்வி நிச்சயம். ஆகையால் இப்போதே ராகுல் காந்தி ஹரியானாவில் பொய் சொல்கிறார்.

33

பீகாரில் இப்போது தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி ஹரியானாவில் போய் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். வாக்கு திருட்டு நடந்தால் நான் ஒரு உதாரணத்தை எடுத்துச் சொல்கிறேன். 4329 போலி வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் இருக்கிறார்கள். அதாவது ஒரே பெயர், ஒரே சொந்தக்காரர்கள் பெயர், ஒரே வயது. ஆனால், வேறு வேறு வாக்காளர் அடையாள அட்டை நம்பர். இப்படி 4379 போலி வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் மட்டும் இருக்கிறார்கள். இதை நான் உதாரணத்திற்கு சொல்லவில்லை. குத்திமதிப்பாகச் சொல்கிறேன். பூத் நம்பர் 157-ல் ரபி உல்லா என்கிற பெயர் மூன்று முறை வருகிறது. ஒரே முகவரியில், ஒரே வயதில், அவரது தந்தை பெயரும் ஒன்றே. ஆனால் அவரிடம் மூன்று வாக்காளர் அட்டை இருக்கிறது.

கொளத்தூரில் 913 பேர் போலி முகவரியில் இருக்கிறார்கள். இதை வைத்து தான் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியுமா? எல்லாம் நீக்குவதற்கான பெயர் தான் எஸ்ஐஆர். இல்லை இல்லை எங்களுக்கு எஸ்ஐஆர் வேண்டாம் என்றால் இந்த போலி வாக்காளர் அடையாள அட்டையை வைத்துதான் ஸ்டாலின் ஜெயித்தாரா? நீங்கள் வாக்குத்திருட்டின் மூலம்தான் ஜெயித்தீர்களா? அந்த சீர்திருத்தம் வேண்டாமா? உங்க போராட்டம் எஸ்ஐஆருக்கு எதிராக இருந்தால் உங்கள் தொகுதியில் இருக்கக்கூடிய இந்த வாக்காளர் அட்டை போலியை எப்படி நீக்குவது? கொளத்தூர் தொகுதியிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது. இதை சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

Read more Photos on
click me!

Recommended Stories