விஜய்யை மூன்றாவது அணியாக இறக்கி, எதிர்ப்பு ஓட்டை மீண்டும் மடைமாற்றி ஆட்சியை அமைக்க பார்க்கிறது திமுக. அதற்காக சில காய்களை திமுக நகர்த்தி வருகிறது. தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடக் கூடாது என்பதை ஆதவ் அர்ஜூனா உடனிருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகிறார். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா செல்லும் இடங்களிலும் பிரச்சினைகளும், குழப்பங்களும் தொடர்ச்சியாக ஏற்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா எங்கள் தங்கை மூலம் தான் எங்கள் குடும்பத்திற்கு உள்ளே வந்தார். மருமகனாக வீட்டிற்கு வந்தவர், எங்கள் தொழிலை எடுத்துக் கொள்ள நினைத்தார். எங்கள் நிறுவனங்களை அபகரிக்க முயன்றார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குடும்பத்தில் சண்டை உருவாகி எனக்கும், அப்பாவுக்கும் பாகுபாடு ஏற்பட்டது. என்னை இரண்டு ஆண்டுகள் குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கும் சூழ்நிலையை உருவாக்கினார் ஆதவ். அதன் பிறகு திமுகவுக்கு சென்றார். அங்கே மாப்பிள்ளை சபரிசனுக்கும், மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தினார். அங்கே கட்சியை கைப்பற்ற சபரீசனுக்கு எனக்கு சில ஐடியாக்களை கொடுத்து குடும்பத்தை பிரித்ததால் அங்கிருந்து துரத்தப்படுகிறார் ஆதவ். அங்கே அடித்து விரட்டப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்க்கப்படுகிறார். அங்கேயும் தலைமையை மீறி இவராக செயல்பட்டு தலைவர்களுக்குள் பிரச்சினை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து துரத்தப்படுகிறார்.