2025 ஜூலை 30 அன்று, நயினார் நாகேந்திரன் அறிவித்த மாநில நிர்வாகிகள் பட்டியலில், ராகவன் மாநில பிரிவு அமைப்பாளர் என்ற புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இது 2021 முதல் அவர் இல்லாத அதிகாரப்பூர்வ பதவி. இப்போது மீண்டும் கட்சிப்பணிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கும் கே.டி.ராகவன் ஒரு நிகச்சியில் பேசும்போது, ‘‘கட்சியில் என்னுடன் இருந்த என் நண்பர்கள் எல்லாம் இப்போது என்ன பதவியில் இருக்கிறார்கள் தெரியுமா? நான் அகில இந்திய இளைஞரணிக்கு அந்தமான் நிக்கோபாரில் மாநிலப்பொறுப்பாளராக இருந்தேன்.
என்னுடன் அப்போது இரண்டு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருந்தவர், இப்போது மஹாராஷ்டிர முதலமைச்சராக இருக்கிறார். இப்போதும் நண்பர்தான். மக்களவை சபாநாயகராக இருக்கக்கூட்டிய ஓம் பிர்லாவும், நானும் ஒரேமட்ட நிர்வாகியாகத்தான் இருந்தோம். அவர் இன்றைக்கு சபாநாயகராக இருக்கிறார். நம்ம அனுராக் தாகூர் அவர் அமைச்சராகி விட்டார். நான் இன்னும் கவுன்சிலராகக் கூட ஆகவில்லை’’ என வேதனைபடத் தெரிவித்துள்ளார்.
"பாவங்கள் எத்தனை உள்ளது என சொல்லமுடியாது. ஆனால், கொடிய பாவம் எது என்பது துரோகம் மட்டுமே. மீண்டும் எழுந்து நிற்கும் நம்பிக்கை நாயகன் கே.டி.ராகவன்’’ என பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் உற்சாகமூட்டி வருகின்றனர்.