
தமிழ்நாட்டு அரசியலில், அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து முக்கியப் பதவிகளைப் பெறுவது புதிதல்ல. குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் உள் பிளவுகள் மற்றும் பாஜக உடனான கூட்டணி மாற்றங்கள் காரணமாக, பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இது திமுகவை வலுவாக்கும் உத்தியை என்று கூறினாலும், திமுகவில் ஆண்டாட்டு காலமாக இருக்கும் தொண்டர்கள், “அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு உடனே பதவி, இங்கேயே பரம்பரை தொண்டர்கள் கொடி பிடித்து, சுவரொட்டி ஒட்டி காலம் காலமாக இயக்கத்தை வளர்த்த நாங்கள் தெருவில் நிற்பதா ர்ன அங்கலாய்த்து வருகின்றனர்
குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து உடனடியாகப் பதவிகளைப் பெற்றுள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அடுத்தடுத்து குழப்பமான சூழலே நிலவி வந்தது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் 2017ஆம் ஆண்டு தனி அணியாக செயல்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் அணி வசம் அதிமுக வந்தது. டிடிவி தினகரன் அமமுக என்கிற தனி கட்சியையே தொடங்கினார். இதனால் அவருக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே அதிமுக, அமமுகவில் இருந்து அதிருப்தி காரணமாக வெளியேறிய பலருக்கும் திமுகவில் ஐக்கியமாகினர்.
2018ஆம் ஆண்டு இறுதியில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி க்கு அடுத்த 50 நாட்களுக்குள் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி வருகைக்குப் பிறகு திமுகவின் செல்வாக்கு கரூர் மாவட்டத்தில் அதிகரித்ததாகவே சொல்லப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராகவும் ஆன நிலையில், தற்போது திமுகவின் மண்டலப் பொறுப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த எம்.பி., தங்க தமிழ்செல்வனுக்கு முக்கிய பதவிகளில் ஒன்றான கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தான் மாவட்ட அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று அவர் கூற தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது தேனி மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இதேபோல 2021ஆம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. 2020ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்.பி., லட்சுமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளார் ஸ்டாலின். அதேபோல தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளராகவும், ராஜ்யசபை எம்.பியாக 3 முறை பதவி வகித்த பாஜக பின்னணி உள்ளவரான மைத்ரேயனுக்கு திமுகவில் இணைண்ந உடன் திமுக கல்வியாளர்கள் அணி துணைத் தலைவர் பதவி வழனஙகப்பட்டுள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜாவுக்கு திமுகவில் இணைந்த பிறகு உடனடியாக திமுக கலாச்சார அணி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த மருது அழகுராஜுக்கு நாட்களில் திமுக செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம், லட்சுமணன் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். அதிமுகவில் இருந்து திமுகவில் எம்.எல்.ஏ-வாக உள்ளவர். திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அன்பு நாகராஜ் அதிமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்தவர். மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த பி. ராசு
அதிமுகவை சார்ந்தவர். திமுகவில் இணைந்தௌடன் துணைச் செயலாளர் பொறுப்பு வழனஙங்கப்பட்டது.
திருப்பூரை சேர்ந்த எஸ்.குமாருக்கு திமுகவில் இணைந்தவுடன் தொழிலாளர் பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டது.
இது திமுகவினரால் எதிரிகளை நண்பர்களாக மாறியதற்கு உதாரணம் என்கின்றனர். இந்த சூழலில் புதிதாக அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு உடனே பதவி அளிப்பது திமுகவில் நீண்ட காலமாக பணியாற்றி முக்கிய பொறுப்புகள் எதுவும் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தாலும் திறமைக்கு மரியாதை அளிக்கும் கட்சியாக திமுக உள்ளது என்றும், இதனால் மேலும் சில அதிமுக தலைவர்கள் திமுகவுக்கு வரவும் வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
இதனால் அதிமுகவில் பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் "பழைய திமுக தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்" என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கட்சியின் நீண்டகால தொண்டர்கள் இருக்கும்போது அனுபவம் இன்றி புதியவர்களுக்கு, குறிப்பாக அதிமுக சார்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவது அநியாயம்" என்று விமர்சிக்கின்றனர். கட்சி பதவி மோகம், அதிருப்தி எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. ஆனால் திமுக மேடையை அதிமுககாரர்கள் அபகரிக்கிறார்கள் என்று விமர்சனம் உள்ளது.
இந்நிலையில் மைத்ரேயனுக்கு திமுகவில் பதவி வழங்கியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக எம்.எல்.ஏ பாலாஜியின் மனைவி ஷர்மிளா, ‘‘இது தேவையா..? அட போங்கய்யா’’ எனக் கூறி அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.