அதிமுக + காங்கிரஸ் + தவெக... அதிர வைக்கும் இபிஎஸின் அண்டர்டீலிங்..? திணறும் திமுக - பதறும் பாஜ..!

Published : Dec 17, 2025, 04:36 PM IST

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி அமைக்க நேரம் இருக்கிறது. கடந்த தேர்தல்களில்  ஒரு மாதத்திற்கு முன்பே கூட்டணியை உறுதி செய்து வந்துள்ளது. ஆகவே கூட்டணியை இந்த தேர்தலிலும் ஒரு மாதத்திற்கு முன்பே உறுதி செய்யலாம் என சூசகமாக தெரிவித்து இருந்தார் இபிஎஸ்

PREV
15
ஆர்வம் காட்டாத அமித் ஷா- அப்செட்டில் இபிஎஸ்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளதால் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மட்டும் ஏற்கனவே வலுவான கூட்டணியை உறுதி செய்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் போக்குகாட்டி வருகிறது. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணியில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

அதிமுக-பாஜக கூட்டணியின் நிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்கிறார்களள் பாஜகவினர். தமிழ்நாட்டில் திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது பாஜக, தமாக தவிர வேறு பெரிய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பதில் முனைப்புக் காட்டாமல் இருந்து வருவது அமித் ஷாவுக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது.

ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ள திமுக அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க சொல்லி அமித் ஷாவிடம் பல முறை வலியுறுத்திப் பார்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க பாஜக அழுத்தம் கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்கிறார்கள்.

25
பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் எடப்பாடி

இந்நிலையில் திமுகவுடன் திடீரென காங்கிரசுக்கு மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் விஜயின் தவெக, காங்கிரஸ், அதிமுக கூட்டணி உருவாகலாம். தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்க்க பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழற்றிவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. காமராஜர் விவகாரம் திமுக, காங்கிரஸ் இடையே பிளவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எம்பிக்களும், எம்எல்ஏக்களும், சில மூத்த தலைவர்களும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்கிறார்கள்.

பாஜக, அதிமுக கூட்டணி பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. கூட்டணி ஆட்சி என பாஜக தலைமை சொல்ல, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்லி வருகிறார் எடப்பாடி. இதனால் கரங்கள் இணைந்தாலும், இதயங்கள் இணையவில்லை என்ற நிலையே தொடர்கிறது. ஆனால், பாஜக உடனோ அல்லது பாஜக இருக்கும் கூட்டணியுடனோ சமரசத்திற்கு இடமில்லை என தவெக திட்டவட்டமாக கூறியிருக்கிறது. விஜயும் அதனை உறுதிப்பட சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் வரவுக்காக பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் முடிவுக்கு எடப்பாடி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தேமுதிக, பாமக, காங்கிரஸ் கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

35
பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது அதிமுகவுக்கு பின்னடைவு?

அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதை எடப்பாடி பழனிசாமி பெரும் பின்னடைவாக பார்க்கிறார். பாஜகவுக்கு என தனித்த பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையில், விஜயின் சினிமா வெளிச்சம், காங்கிரசின் சிறுபான்மை வாக்குகள் ஆகியவை அதிமுகவுக்கு வந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பது எடப்பாடியின் கணக்கு. அதை நோக்கியே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகளும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் துணை முதலமைச்சர், 80 சீட்டுகள் என விஜய் பிடிவாதமாக இருப்பதும் எடப்பாடிக்கு சற்று நெருக்கடியான விஷயம்தான் என்றாலும், பேச்சுவார்த்தைகள் மூலம் அதை சமூகமாக தீர்க்கப்படும் என்கின்றனர் அதிமுக சீனியர்கள்.

பாஜகவை அதிமுக கழற்றி விடும் முடிவு ஒன்றும் புதிதல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது டெல்லியில் என்.டி.ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய பிறகு கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது கூட்டணி அறிவிக்கும் முன்னர் வரை பாஜகவுடன் பிடிவாதம் காட்டியவர்தான். அதிமுக,தவெக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது என்றும் பேசிக் கொள்கிறார்கள். தவெக உடன் இரகசியமாக காங்கிரஸ் ராகுல் காந்தியின் ஆலோசகர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

45
அதிமுக+ தவெக+ காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரம்?

தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பிறகட்சிகள் எல்லாம் கூட்டணியை உறுதி செய்த பின்னர் பாஜகவை கழட்டி விட்டு அவர்களுக்கு வேறு எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி பாஜகவின் சாணக்கியர் கையை பிசைந்து கொண்டு நிற்க செய்ய வேண்டும் என்று ஒரு பலே திட்டத்துடன் தான் எடப்பாடியார் செயல்படுகிறார் என்று பேசிக் கொள்கிறார்கள். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க பாஜக அழுத்தம் கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இந்நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி ஓபிஎஸை டெல்லிக்கு அழைத்துச் சென்று வெறுப்பேற்றுகிறார். பாஜகவுக்குள்ள வாக்கு சதவிகித்திற்கு அதிக சீட்டுகளை ஒதுக்கவும் முடியாது. அப்படியே ஒதுக்கினாலும் வெற்றி பெற மாட்டார்கள். ஆட்சியில் பங்கு என்கிற நிலையையும் உருவாக்குவார்கள். ஆகவே அதிமுக, தவெக, காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

55
பாஜக எடுக்கும் முடிவு என்ன?

அதனை இப்போது வெளிப்படுத்தினால், பாஜகவும், திமுகவும் பல இடையூறுகளை செய்து தடுக்க முயல்வார்கள் என்பதால் தேர்தல் நெருங்கும் சில மாதங்களுக்கு முன்பு இந்த ரகசியக் கூட்டணியை வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கலாம் என திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள். திமுக, பாஜக அல்லாத கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் எனத் தெரிவித்து இருந்தார் விஜய். சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி அமைக்க நேரம் இருக்கிறது. கடந்த தேர்தல்களில் அதிமுக ஒரு தேர்தல் நடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கூட்டணியை உறுதி செய்து வந்துள்ளது.

ஆகவே கூட்டணியை இந்த தேர்தலிலும் ஒரு மாதத்திற்கு முன்பே உறுதி செய்யலாம் என சூசகமாக தெரிவித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதிமுக, தவெக, காங்கிரஸ் கூட்டணி அமையுமா? அப்படி அமைந்தால் மத்தியில் பலம் வாய்ந்த பாஜக எடுக்கும் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories