இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!

Published : Dec 17, 2025, 12:10 PM IST

ஆர்எஸ்எஸ் திருமாவளவன், ஆர்எஸ்எஸ் ஸ்டாலின். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆர்எஸ்எஸ் கம்யூனிஸ்டாக இருந்தால் கூட நாங்கள் சந்தோஷப்படுவோம்.

PREV
14

‘‘திருமாவளவன் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் பட்டியல் சார்ந்த ரிசர்வ் தொகுதியில் போட்டிட்டு இருக்கவே முடியாது’’ என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமாவளவன் இந்து மதத்தை பற்றி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராம சீனிவாசன், ‘‘ஏன் இந்து என்ற வார்த்தையில் என்ன பிரச்சனை திருமாவளவனுக்கு? அவர் இந்து என்பதால்தான் பட்டியல் சமுதாய தலைவராக இருக்கிறார். அவர் இந்து என்கிறதனால் தான் ரிசர்வ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இந்து என சாதிச் சான்றிதழ் கொடுத்ததால்தான் அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம். அவர் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் பட்டியல் சார்ந்த ரிசர்வ் தொகுதியில் போட்டிட்டு இருக்கவே முடியாது.

24

இப்ப அவர் ஜாதி சான்றிதழில் இந்து என இருக்கிறது. அதை என்ன செய்யப் போகிறார். அதை சைவம் என மாற்றப்போகிறாரா?வைணவம் என மாற்றப்போகிறாரா? அதில் வேண்டுமானால் அவர் புரட்சி செய்து காட்டிவிட்டு அதற்குப்பிறகு அவர் பேசட்டும். இந்து என்கிற வார்த்தை வரலாற்றில் இருந்ததில்லை. அதனால் அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. சைவம், வைணவம் என்ற வார்த்தைதான் பயன்படுத்த வேண்டும் என விவாதம் வைக்கிறார். நான் கேட்கிறேன் தமிழ் என்ற வார்த்தை வரலாற்றில் எப்போது இருந்தது? மதராசி என்கிற வார்த்தைதான் வழக்கத்தில் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வருஷமாக நம்மை எல்லாம் பார்த்தால் மதராசி என சொல்வார்கள். தமிழன் என யார் சொன்னார்? அப்படியென்றால் அதையும் மாற்றி விடலாமா? தமிழன் என்று சொல்லக்கூடாது.

34

வரலாற்றில் தமிழன் என்கிற வார்த்தை எந்த சங்க இலக்கியத்திலும் இல்லை. இடைக்கால இலக்கியங்கள் எதிலும் இல்லை. நவீன இலக்கியங்கள் வந்ததற்கு பிறகுடான் அந்த வார்த்தை வருகிறது. அப்படியானால் தமிழன் என்ற வார்த்தை வேண்டாம். மதராசி என்று சொல்லலாமா? ராஜராஜ சோழன் இந்து மன்னன் இல்லை. இந்து என்ற வார்த்தையே இல்லை என்றால் இந்தியா என்ற வார்த்தை கூட இல்லை. ராஜராஜசோழன் இந்திய மன்னன் இல்லை. ராஜேந்திர சோழர் இந்திய மன்னன் இல்லை. சந்திரகுப்த மௌரியன் இந்திய மன்னன்இல்லை. அப்படியானால் எந்த நாட்டுக்கு மன்னர்கள்?

44

தமிழக வரலாற்றில் 2000 வருடங்களொல் தமிழ்நாடு என்ற வார்த்தை இருந்ததா? வரலாறு இருந்ததா? ஒரு தேசம் இருந்ததா? சேர நாடு, சோழ நாடு, பாண்டியநாடு தான் இருந்தது. தமிழக அரசாங்கம் இதை பிரித்து மூன்று நாடுகளாக ஆக்க முன் வந்தால் திருமாவளவன் சொல்கிற மாதிரி சைவ அறநிலையத்துறை, வைணவ அறநிலையத்துறை என்று வைத்து விடுவோம். சனாதானத்தை நான் வரவேற்கிறேன். ஜனாதிபதியிலிருந்து கடை நிலையில், சாதாரண நிலையில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அடையாளத்துடன் இருக்க வேண்டிதான் ஆசைப்படுகிறோம். ஆர்எஸ்எஸ் திருமாவளவன், ஆர்எஸ்எஸ் ஸ்டாலின். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆர்எஸ்எஸ் கம்யூனிஸ்டாக இருந்தால் கூட நாங்கள் சந்தோஷப்படுவோம். ஆர்எஸ்எஸ் என்பது நல்ல மனிதர்களை உருவாக்குவது. தேசபக்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories