ஆதரவும் இல்லை, ஒத்துழைப்பும் இல்லை..! பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்- நடிகை கவுதமி

Published : Oct 23, 2023, 08:56 AM ISTUpdated : Oct 23, 2023, 09:01 AM IST

இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் நிற்பதாக தெரிவித்துள்ள நடிகை கவுதமி,  பாரதிய ஜனதா கட்சி மற்றும் கட்சி தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் எனது நிலத்தை மோசடி செய்த நபருக்கு தீவிரமாக ஆதரவாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.   

PREV
16
ஆதரவும் இல்லை, ஒத்துழைப்பும் இல்லை..! பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்- நடிகை கவுதமி
Gautami

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை கவுதமி, இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாக பல்வேறு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனிடையே கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார் தெரிவித்து இருந்தார்.

26
Gautami

அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், என்னுடைய மகளின் பராமரிப்பு செலவு மற்றும் என்னுடைய மருத்துவ செலவுகளுக்காக எனக்கு சொந்தமான நிலத்தை  கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் அழகப்பன் என்பவரிடம் விற்றுத்தருமாறு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆவணங்களை கொடுத்து இருந்தேன். 

36

என்னை ஏமாற்றும் நோக்கத்தில் போலி ஆவணங்களை தயாரித்து அவரும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை என்னிடம் இருந்து ஏமாற்றி விற்றுள்ளதாக தெரிவித்து இருந்தார்.  இந்த சூழ்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். நாட்டை கட்டியெழுப்புவதற்கான எனது முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில்  சேர்ந்தேன். 

46
gautami

இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன், இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் எனது நிலத்தை மோசடி செய்த நபருக்கு தீவிரமாக ஆதரவாக உள்ளனர்.  

நான் 17 வயதிலிருந்தே பணிபுரிந்து வருகிறேன், சினிமா, தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் மீடியா என 37 வருடங்களாக எனது தொழில் வாழ்க்கை நீடித்தது. எனது வாழ்நாள் முழுவதும் உழைத்தேன், இந்தநிலையில்  சி.அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்ததை அதிர்ச்சி அடைந்துள்ளேன். 

56

20 ஆண்டுகளுக்கு முன்பு எனது உடல் நிலை பாதிப்பு,பெற்றோரை இழந்து தனிமையில் கைக்குழந்தையோடு தவித்தேன் அப்போது எனக்கு உதவுவதாக தெரிவித்த அன்பழகனிடம் எனது சொத்துக்களை விற்றுக்கொடுக்க கொடுத்தேன். ஆனால் தற்போது எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்ததை தற்போது தான் அறிந்தேன்.  நான் உழைத்து சம்பாதித்த பணம், சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு சட்ட போராட்டங்களை மேற்கொண்டேன்.

ஆனால் தொடர்ந்து இழுத்தடிப்பு நடவடிக்கைகள் தான் தொடர்ந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து பணிகளில் ஈடுபட்டேன். ஆனால் கடைசி நிமிடத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. 

66

அதனையும் பொருட்படுத்தாமல் கட்சி மீதான உறுதிப்பாட்டை காப்பாற்றினேன். எனினும் 25 ஆண்டுகாலம் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை என்பதையும், அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன். எனவே மிகுந்த வேதனையில் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செயு்துள்ளதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories