அடிப்படையில் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இவருக்கு மூத்த பா.ஜ.க. தலைவர்கள் யாருமே ஆதரவாக இல்லை. இவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தான். இந்த சூழலில் ஒட்டுமொத்த பா.ஜ.க. எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., - பா.ஜ.க. கூட்டணி அமைய வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் விருப்பத்திற்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க., ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு எந்த காலத்திலும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்து விட்டார். அதற்குப் பிறகு அண்ணாமலை தில்லிக்கு அழைக்கப்பட்டு, இனி அ.தி.மு.க.வுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதற்கு பிறகு பல் பிடுங்கிய பாம்பாக, பியூஸ் போன பல்பாக செயல்பட்டு வருகிறார்.