
தமிழக அரசியலில் தங்களது தோல்வியின் மூலம் வெற்றியை சாதிக்க நடக்கும் ஒரு விசித்திரமான காய் நகர்தல் பெரும் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு எதிராக ஒரு ரகசிய வியூகத்தை அறிவாலயம் மிக தந்திரமாக வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக - அதிமுக -பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரிப்பது திமுகவின் முதன்மையான திட்டம் என்கின்றார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளையும், வட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தையும் வாக்குகளையும் பிரித்து விட்டால் திமுகவின் வெற்றி மிக எளிதாகிவிடும். இதற்காக சசிகலா, ஓபிஎஸ், ராமதாஸ் ஆகிய மூன்று டைம் பாம்களை அறிவாலயம் தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மூவரிடமும் இப்போது பெரிய அளவில் பண பலமோ, பலமான கட்டமைப்போ இல்லை என்பது தான் உண்மை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தோற்று விட்டால் அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்ற சசிகலாவின் ஆசையும், அன்புமணி தோற்றுவிட்டால் பாமகவை வசப்படுத்திவிடலாம் என்ற ராமதாஸ் எண்ணத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது திமுக.
இவர்கள் மூவரையும் ஒரு கருவியாக மாற்றி அதிமுக கூட்டணியை சிதைக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பின்னணியிலிருந்து சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஒரு திமுக பிரமுகர்கள் உறுதி அளித்திருப்பதாக பேச்சுக்கு அடிபடுகின்றன. இவர்கள் போட்டியிட்டால் நிதி உதவி செய்ய திமுக தயார். தவிர ஒவ்வொரு தரப்புக்கும் தலா இரண்டு தொகுதிகளை திமுகவிட்டுக் கொடுக்கொடுக்கலாம். அதாவது அந்த ஆறு தொகுதிகளிலும் திமுக பலமான வேட்பாளர்களை இறக்கிவிடும். இதன் மூலம் திமுகவுக்கு ஆறு தொகுதிகள் இழப்பு ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக 80 தொகுதிகள் வரை லாபம் கிடைக்கும் என்று கணக்கு போடப்படுகிறது.
எடப்பாடியை முதலமைச்சராக்கிய தன்னை அவர் லெட்டர் பேட் கட்சி போல நடத்துவதாக சசிகலா கடும் கோபத்தில் இருக்கிறார். 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடியை முதலமைச்சராக்கவே சசிகலாவுக்கு விருப்பம் இல்லை என்றும், செங்கோட்டையனை தான் அவர் முதலில் யோசித்தார் என்றும் இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டிடிவி.தினகரனின் வற்புறுத்தல்களால் தான் எடப்பாடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உதைத்தை சசிகலாவால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை. துரோகம் செய்தவர்களுக்கு பாடம் கற்பிப்பேன் என அவர் சபதமேற்றுள்ளார்.
தனது சகோதரர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் மூலமாக சுமார் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த சசிகலா முடிவு எடுத்திருக்கிறார். துரோகிகளுக்கு நீதி கேட்டு பயணம் என்ற பெயரில் அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடப்பதாகவும், அதிமுகவிலிருந்து விலகிய சில புள்ளிகள் இதற்கு தூதுவர்களாக செயல்படுவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. அவர்களுடன் சசிகலா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவரையும் தன்னோடு கூட்டணியில் இணைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறப் போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் அவர்கள் பிரிக்கும் 5000, அல்லது 6000 வாக்குகள் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை பாதிக்கும். எடப்பாடி பழனிசாமி அதிமுக படுதோல்வியை சந்தித்தால் மட்டுமே கட்சி மீண்டும் தங்களின் கைக்கு வரும் என்று அவர்கள் ஒரு கணக்கு போடுகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது சசிகலாவும், தினகரனும் நேருக்கு நேர் சந்திப்பை தவிர்த்தனர். தினகரன் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சொன்றது இருதரப்பு ஆதரவாளர்கள் இடைய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அரசியலில் முடக்கி விட்ட தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக காட்ட சசிகலா துடிக்கிறார். இதுவரை அமைதி காத்து வந்த சசிகலாவும் இந்த அதிரடியால் தமிழக அரசியல் தேர்தல் களம் சூடாகி உள்ளது. இது ஒருபமிருக்க ராமதாஸ் மகனை தோற்கடிக்க கச்சை கட்டிக் கொண்டிருக்கின்றார். பாமக சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது அன்புமணிக்கு சாதகமாக வந்துள்ளது. டெல்லியில் இருப்பவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாக அவர் கருதுகிறார் ராமதாஸ். பேச்சுவார்த்தையை அன்புமணியிடம் நடத்திவிட்டு அவரை பிரதமர் மேடையில் ஏற்றியதை ராமதாஸ் விரும்பவில்லை.
60 தொகுதிகளில் போட்டியிடுவது தான் ராமதாஸின் திட்டம். அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கமாக இருக்கிறது. இதற்காக கிராமம் கிராமமாக சென்று கண்ணீர் சிந்தி வன்னியர் வாக்குகளை பெற அவர் திட்டமிட்டுள்ளார். ராமதாஸுக்கும், அவரது சமூகத்திற்கும் இடையே இருக்கும் உணர்ச்சிகரமான பிணைப்பு அதிமுக கூட்டணியில் வட மாவட்டங்களில் நிலைகுலை செய்யும் வாய்ப்பு உள்ளது. திமுக இவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சில தொகுதிகளில் தோல்வியடைந்தாலும், பெரும்பாலும் ஜெயிக்கு திமுக இப்படிப்பட்ட விசித்திரமான சித்து விளையாட்டுகளை தொடங்கியுள்ளது.