பெற்றோர்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் தங்கள் குழந்தையின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
நவீன உலகில் குழந்தைகள் மீது பெற்றோர் இருவரும் வேலை செய்யும் முறை இயல்பாகிவிட்டது. ஆனால் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்காமல் அதை எவ்வாறு திறம்பட கடப்பது என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்? விரிவாக பார்க்கலாம்.
கூட்டுக் குடும்ப அமைப்பில், தாயைத் தவிர ஒரு குழந்தைக்கு பல பராமரிப்பாளர்கள் இருந்ததால், ஒரு குழந்தையை வளர்ப்பது எளிதான விஷயமாகவே இருந்தது. அத்தைகள், மாமாக்கள், தாத்தா பாட்டி - எல்லோரும் குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பதில் உதவினார்கள். எவ்வாறாயினும், தனிக்குடும்பங்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது.
அதே நேரம் வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தையை விட்டுச்செல்ல குடும்ப உறுப்பினர் இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பில் பெரிய அளவிலான சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே வேலை செல்லும் பெற்றோர்களால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.