Astrology Vastu Tips: ஆணின் தலையெழுத்தை மாற்றும் பெண்ணின் ஜாதகம்..வாஸ்து, சாஸ்திரம் என்ன சொல்லுது தெரியுமா..

Published : Aug 14, 2022, 05:22 PM ISTUpdated : Aug 15, 2022, 08:30 AM IST

Astrology Vastu: ஜோதிடத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடலாம், ஒருவர் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், அவருக்கு நேரம் நல்ல இல்லை என்றால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே, செல்வம், புகழ் தேடி வருவதற்கு ஒருவருக்கு நேரம் நன்றாக இருக்க வேண்டும். 

PREV
15
Astrology Vastu Tips: ஆணின் தலையெழுத்தை மாற்றும் பெண்ணின் ஜாதகம்..வாஸ்து, சாஸ்திரம் என்ன சொல்லுது தெரியுமா..
astrology vastu

ஜோதிடம் என்பது ஒருவரின் வாழ்வில் பிறந்த தேதியை வைத்து கணிக்கப்படுகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும் போதே உங்களின் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. குழந்தை  ஆணா பெண்ணா அது எந்த நேரம் பிறந்தால் நல்லது என்று ஜோதிட ரீதியாக கணிக்கப்படுகிறது. அதுபோன்று, திருமணத்திற்கு தயாருக்கும் பெண்ணும், ஆணுக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கப்படுகிறது. குறைந்தது பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது இருக்க வேண்டும். 


 

25
astrology vastu

பத்து பொருத்தமும், பொருந்தியிருந்தால் பாதி திருமணம் முடிந்த மாதிரி தான் என்பார்கள். அதேபோன்று, திருணத்திற்கு பிறகு  ஒரு ஆணின் ஜாதகத்தைப் பார்த்து அவருடைய மனைவியைப் பற்றிய துல்லியமான தகவலை வழங்க முடியும். அதேபோன்று ஒரு பெண்ணின் ஜாதகத்தை வைத்து, அவருடைய கணவரை குறித்து வேலை, குணம், ஆயுள், அன்பு, காதால் என பல விஷயங்களை சொல்லி விடலாம்.

மேலும் படிக்க...Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..

35
astrology vastu

1. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சனி இருந்தால், அத்தகைய பெண்களின் திருமணத்தில் பல தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கவே இருக்காது.

2. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சம கிரகமான புதனும், தோஷ கிரகமான சனியும் ஒன்றாக இருந்தால், திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டமான கணவருக்கு குழந்தை பேறு இருக்காது. 

மேலும் படிக்க...Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..

45
astrology vastu

3. ஒரு பெண்ணின் ஜாதகத்தின் எட்டாவது வீட்டில் சனி இருந்தால், அது அவரது கணவருக்கு சாதகமற்றதாக இருக்கும். ஒரு பெண்ணின் ஜாதகத்தின் லக்னத்தில் புதனும் சுக்கிரனும் இருந்தால், கணவனின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுவதற்காக பார்க்கப்படுகின்றது

4. ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் சனி கிரகம் அசுப நிலையில் இருந்தால், அந்த பெண்ணுக்கு அமையும் கணவன், மிகவும் கொடூரமானவனாகவும், ஏழையாகவும் இருப்பார். 

5. அதுவே, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சுப கிரகம் இருந்தால், அவரது கணவர் அழகாகவும், விவேகமுள்ளவராகவும், உயர் கல்வி பெற்றவராகவும் இருப்பார்.

55
astrology vastu

6. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், மிருத்யு (மரண) யோகம் உருவாகிறது. இது அவருடைய கணவருக்கு மரணம் ஏற்படுவதைக் காட்டுகிறது. இது தவிர, ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் சனி மற்றும் சூரியன் இருந்தால், கணவர் பிரிந்து சென்று விடுவார். 

7. அதாவது, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் செவ்வாய் இருந்தால், அந்த பெண்ணுக்கு வைதவ்ய தோஷம், அதாவது கைம்பெண்ணாக மாறும் நிலை ஏற்படும். இதனால், தான் மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..

Read more Photos on
click me!

Recommended Stories