Peppermint Tea: சிறுநீரகத்தை பாதிக்கும் உங்களின் ஆரோக்கிய மூலிகை டீ...! இனிமேல் இந்த விஷயத்தில் உஷாராக இருங்கோ

First Published Aug 14, 2022, 12:46 PM IST

Peppermint Tea: புதினா டீ  உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் அலட்சியமாக இருந்தால் பல்வேறு பக்க விளைவுகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவில் பார்க்கலாம்.

Peppermint Tea:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உடல் ஆரோக்கியத்திற்காக  பால், டீ க்கு மாற்றாக மூலிகை டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் இது உண்மைதான். ஆனால் இது அளவை விட அதிகமாக உட்கொண்டால் பல்வேறு பக்க விளைவுகள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட புதினா  டீயை அதிகமாக உட்கொண்டால், வசில பக்க விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

மேலும் படிக்க ...Food: உங்கள் வாழ்நாளை அதிகரிக்க உத்தரவாதம் தரும் 5 ஊட்டச்சத்துக்கள்! டயட் லிஸ்டில் கட்டாயம் இருக்க வேண்டும்..
 

peppermint

புதினா டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

செரிமானம் பாதிப்பு:

செரிமானம் குறைவாக உள்ளவர்களுக்கு, புதினா டீ ஏற்றது அல்ல. ஏனெனில் புதினா டீயில் உள்ள மெந்தோல் வயிற்று பிரச்சனைகளை அதிகரிக்கிறது. இது அமிலச் சுரப்பு, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவற்றில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும், இது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மேலும் படிக்க ...Food: உங்கள் வாழ்நாளை அதிகரிக்க உத்தரவாதம் தரும் 5 ஊட்டச்சத்துக்கள்! டயட் லிஸ்டில் கட்டாயம் இருக்க வேண்டும்..
 

Peppermint Tea:

பாக்டீரியா தொற்று

புதினா  டீயை தேவைக்கு அதிகமாக குடித்தால், பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, மருத்துவரை அணுகாமல் அதனை அதிகமாக குடிக்க வேண்டாம். அதேபோன்று, தூங்க மின்மை  பிரச்சனை உள்ளவர்கள்,புதினா டீயைக் குடிக்கக் கூடாது.
 

Peppermint Tea:

கர்ப்ப காலத்தில் பாதிப்பு 

கர்ப்பிணிப் பெண்கள் புதினா டீயிலிருந்து விலகி இருப்பது அவசியம்.  ஏனெனில் இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். உண்மையில் புதினா டீயில் உள்ள பெப்பர்மின்ட் ஆயில் கருப்பையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கருக்கலைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். 

Peppermint Tea:

சிறுநீரக நோய் பாதிப்பு:

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் புதினா டீயை அருந்தவே கூடாது. ஏனெனில் அது உங்களுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கும்.  சில நேரங்களில் இது உங்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுத்துவதைத் தூண்டலாம். எனவே, சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் புதினா டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க ...Food: உங்கள் வாழ்நாளை அதிகரிக்க உத்தரவாதம் தரும் 5 ஊட்டச்சத்துக்கள்! டயட் லிஸ்டில் கட்டாயம் இருக்க வேண்டும்..

click me!