Food: உங்கள் வாழ்நாளை அதிகரிக்க உத்தரவாதம் தரும் 5 ஊட்டச்சத்துக்கள்! டயட் லிஸ்டில் கட்டாயம் இருக்க வேண்டும்..

Published : Aug 14, 2022, 11:57 AM IST

Longevity Nutrients: உங்கள் வாழ்நாளை அதிகரிக்க, இந்த 4 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
Food: உங்கள் வாழ்நாளை அதிகரிக்க உத்தரவாதம் தரும் 5 ஊட்டச்சத்துக்கள்! டயட் லிஸ்டில் கட்டாயம் இருக்க வேண்டும்..
pure longevity nutrients

ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதற்கு உணவும், வாழ்கை முறை மாற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் நாள் ஒன்றுக்கு எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது  ஆரோக்கியம் சார்ந்தவை அல்ல. உண்மையில் சொல்ல போனால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதே ஆரோக்கியம் சார்ந்தது ஆகும். எனவே, உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன என்பதைதெரிந்துக் கொள்ளுங்கள்.அவற்றை கண்டிப்பாக உங்களுடைய டயட் லிஸ்டில் சேர்த்து கொள்ளுங்கள். 

27
pure longevity nutrients

இரும்பு சத்து கொண்ட உணவுகள்:

பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், மீன், கோழி, இறைச்சிகள், முட்டை, பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவை இரும்புச் சத்தின் வளமான ஆதாரங்களாகும். அதேபோன்று, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது பச்சை இலை காய்கறிகளைச் சேர்ப்பது முக்கியம்.

 மேலும் படிக்க...Weekly Horoscope: இந்த வாரம் ஆகஸ்ட் (15 முதல் 21) வரை பலன்கள், இந்த ராசிகளுக்கு தொழில் ரீதியாக முழு பலன் உறுதி

37
pure longevity nutrients

புற்றுநோய் பாதிப்பபை தவிர்க்கும்:

ஆசிய மக்கள் மத்தியில் மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் கணிசமாகக் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அவர்களின் உணவில் சோயா, காய்கறிகள் மற்றும் தேநீர் போன்றவை அதிகமாக இருப்பது ஆகும். 

புரதம் கொண்ட உணவுகள்:

நட்ஸ், பால், தயிர், பனீர் சீஸ், சோயா பொருட்கள், டோஃபு மற்றும் பீனட் பட்டர் போன்ற புரதத்தின் தேவையை சிறப்பாக நிறைவு செய்கின்றன. 

 

47
pure longevity nutrients

இதய ஆரோக்கியம் மேம்படுத்தும் உணவுகள்:

சோயா, தேநீர், கருப்பு ராஸ்பெர்ரி, தக்காளி, மாதுளை, அதிமதுரம், பீர் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள்..புதிய இரத்த நாளங்களை உருவாக்கும், இருதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரத்த விநியோகத்தை மீட்டெடுப்பதற்கும் முக்கியமானது. ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க, புதிய இரத்த நாளங்கள் உருவாவது அவசியம். இதன் மூலம் நீண்ட ஆயுளை அதிகரிக்கலாம்.

 மேலும் படிக்க...Weekly Horoscope: இந்த வாரம் ஆகஸ்ட் (15 முதல் 21) வரை பலன்கள், இந்த ராசிகளுக்கு தொழில் ரீதியாக முழு பலன் உறுதி

57
pure longevity nutrients

டிஎன்ஏவைப் பாதுகாக்கும் உணவுகள்:

வைட்டமின்கள் ஏ, சி, டி, ஈ, பீட்டா கரோட்டின், லைகோபீன், லுடீன் மற்றும் செலினியம் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள், கீரை, காலே மற்றும் பிற இலை கீரைகள், வாழைக்காய், கேரட், ப்ரோக்கோலி, ஆரஞ்சு, பெர்ரி, சிவப்பு மிளகுத்தூள், பருப்பு, கடற்பாசி, முட்டை, மத்தி, பாதாம், ஆளிவிதை, பூசணி விதைகள், காபி, தேநீர், சோயா மற்றும் மஞ்சள் போன்ற மசாலாக்களில் இருக்கிறது. 

 

67
pure longevity nutrients

மீன் மற்றும் ஃபிளாவனாய்டுகள்

கொழுப்பு நிறைந்த மீன் மீளுருவாக்கம் செய்ய உதவும் மிகவும் சக்திவாய்ந்த உணவுகளில் ஒன்றாகும். ஃபிளாவனாய்டு நிறைந்த டார்க் சாக்லேட், பிளாக் டீ, பீர், ரெட் ஒயின், மாம்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை மீளுருவாக்கம் தூண்டும் உணவுகள் ஆகும்.

 மேலும் படிக்க...Weekly Horoscope: இந்த வாரம் ஆகஸ்ட் (15 முதல் 21) வரை பலன்கள், இந்த ராசிகளுக்கு தொழில் ரீதியாக முழு பலன் உறுதி

உடலின் ஸ்டெம் செல்கள் உறுப்புகள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நுரையீரல் மற்றும் குடல் ஆகியவற்றில் வாழ்கின்றன. நாம் உண்ணும் உணவுகளால் அவற்றின் செயல்திறன் பாதிக்கப்படலாம். எனவே, ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். 
 

 

77
pure longevity nutrients

நுண்ணுயிரிகளை அதிகரிக்கும் உணவுகள்:

நுண்ணுயிர்கள், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிவி, புளிப்பு நிறைந்த பழங்கள், டார்க் சாக்லேட், நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ், கொத்தவரங்காய், தயிர் மற்றும் போன்றவை உடலை நீண்ட நாட்கள் வரை ஆரோக்கியமாக வைத்து ஆயுளை கூட்டும்.

அதேபோன்று, தண்ணீர் குடிப்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு அவசியம்.  ஆனால், நமது உணவில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பு போன்ற உணவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

 

Read more Photos on
click me!

Recommended Stories