குளிர்காலத்தில் தான் சருமம் வறண்டு போய் விடும். காற்றில் ஈரப்பதம் குறைவதால் சருமம் உலர்வடைந்து விடும். இது போன்ற நேரத்தில், ஒவ்வொரு பெண்ணும் முகம் பொலிவு பெற வேண்டும் என்று விரும்புவது இயல்பான விஷயம் தான். அதற்காக பெரும்பாலான 'பெண்கள் பியூட்டி பார்லர்' சென்று தங்களை அழகுப்படுத்துவர். சிலர், சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும் எண்ணற்ற ரசாயனம் கலந்த பொருட்களை சந்தையில் வாங்கி பயன்படுத்துவர்.
அவை சில நன்மைகளை வழங்கினாலும் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. எல்லோருடைய சருமத்திற்கும் அவை ஒத்துக்கொள்வதில்லை. எனவே, குளிர் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க அதிமதுரம் பேஸ் பேக் உங்களுக்கு உதவியாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அதிமதுர தூள் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 /2 டீஸ்புன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்புன் தூய தேன், கடலைமாவு - 2 டீஸ்புன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். பிறகு அதில், பால், ரோஸ் வாட்டர் , தக்காளி சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும்.
பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவி உலர வைக்கவும் ஃபேஸ் பேக் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
55
Athimathuram Powder
அதிமதுரம் பயன்கள்:
இந்த மாஸ்க்கில் உள்ள அதிமதுரம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் போக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும். மேலும், தேனில் உள்ள பாக்ட்டீரிய எதிர்ப்பு பண்புகள், எலுமிச்சை சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.
மேலும், வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. அதிமதுரம் சருமத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தரும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.