Sun and Venus Transit
எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை, சூரிய பகவான் சில ராசிக்காரர்களுக்கு பூரண அருளை கொடுக்க உள்ளார். அதுமட்டுமின்றி, புதன் கிரகம் ஏற்கனவே சிம்ம ராசியில் தங்கி இருக்கிறார். இதனால், வரும் டிசம்பர் 31, 2022 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் இருக்கப் போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Sun and Venus Transit
சிம்மம்:
வேலையில் உற்சாகம் இருக்கும். வேலையில் கவனத்துடன் செயல்பட்டால், வருமானம், வெற்றி ஆகியவை வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் தாயின் ஆதரவு கிடைக்கும். அன்னை மகாலட்சுமியின் அருளால் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய நட்பு ஏற்படலாம். வேலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாட்டு தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
Sun and Venus Transit
கன்னி:
தொழில் விரிவாக்கத் திட்டம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும. ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிரபாராத வகையில் செல்வம் பெருகும். வாழ்வில் அனுகூலம் கிடைக்கும், வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் துக்கம், வேதனைகள் விலகும்.