ஒரே ரத்த வகை உள்ளவர்களை திருமணம் செய்ய போகிறீர்களா..? அப்படினா..திருமணத்திற்கு முன்பு கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

First Published Aug 14, 2022, 9:54 AM IST

Blood Group: ஒரே ரத்த வகையை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா..? என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ள போகிறோம். 

blood group

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம்.  நம்முடைய நாட்டில் பொதுவாக திருமணத்திற்கு முன்பு ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். மன பொருத்தமும் பார்ப்பார்கள். இதனை தவிர்த்து சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பார்கள். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பு இரத்த பொருத்தம் பார்ப்பது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக, ஒரே ரத்த வகையை சேர்ந்த ஆண் -பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளும்     குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க ....Suriyan Peyarchi 2022: சூரியனின் பெயர்ச்சியால்..பாவங்களில் இருந்து விடுபட்டு வெற்றிகளை தொடும் சில ராசிகள்...
 

blood group

ரத்த வகைகள்..?

மனிதர்களிடம் பல்வேறு வகையான இரத்த வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக, AB, A, B, O இந்த ரத்த வகைகளை பிரிக்கும் போது. A பாசிடிவ்,  A நெகட்டிவ்,  B பாசிடிவ்,  B நெகட்டிவ்,  ABபாசிடிவ், AB நெகட்டிவ், O  பாசிடிவ் மற்றும்  O  நெகட்டிவ் என்று எட்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

blood group

ஒரே ரத்த வகையை கொண்டவர்கள் திருமணம் செய்யலாமா..?

ஒரே ரத்த வகையை கொண்டவர்கள் திருமணம் செய்யலாம். உதாரணமாக, B பாசிடிவ் கொண்ட ஆண்-B நெகட்டிவ், ரத்த வகையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.இதனால் குழந்தை பிறப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில் RH ரத்தவகை கொண்ட பெண்கள் எதிர் தரப்பான ABO ரத்த வகையினரைத் திருமணம் செய்து கொள்ளும்போது குழந்தை விஷயத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

மேலும் படிக்க ....Suriyan Peyarchi 2022: சூரியனின் பெயர்ச்சியால்..பாவங்களில் இருந்து விடுபட்டு வெற்றிகளை தொடும் சில ராசிகள்...

blood group

சிவப்பு இரத்த அணுக்களில் Rh புரதங்கள் கொண்டவர்கள் பாசிடிவ் இரத்த வகை உள்ளவர்கள் என்றும், இல்லாதவர்கள் நெகடிவ் இரத்த வகை உள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இதில் Rh பாசிடிவ் என்பது மிகவும் பொதுவான இரத்த வகை. Rh நெகடிவ் என்பது அரிதான இரத்த வகை. இந்த நெகடிவ் இரத்த வகை உங்க உடல் நலத்தை பாதிக்காது ஆனால் உங்க கர்ப்பத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க ....Suriyan Peyarchi 2022: சூரியனின் பெயர்ச்சியால்..பாவங்களில் இருந்து விடுபட்டு வெற்றிகளை தொடும் சில ராசிகள்...
 

இதனால் சில சமயங்களில் மூளை குறைபாடு கொண்ட குழந்தைகள், குறுகிய காலத்தில் கரு களைந்து போதல், ஏன் உயிரிழப்பு கூட நிகழ்கிறது. இதனால் ரத்த வகையை அவசியம் தெரிந்து கொண்டு அதற்கு பிறகு துணையை தேடிக் கொள்வதுசிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

click me!