AI: மனித மூளைக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் AI தொழில்நுட்பம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்.!

Published : Aug 05, 2025, 03:02 PM ISTUpdated : Aug 05, 2025, 03:03 PM IST

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

PREV
16
செயற்கை நுண்ணறிவு குறித்த ஆய்வு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பல நன்மைகள் தந்தாலும், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி தொடங்கி உயிர் காக்கும் மருத்துவத் துறை வரை இந்த தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது. மனிதர்களின் வேலை வாய்ப்பையும் பறித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த எம்.ஐ.டி என்கிற நிறுவனம் செயற்பை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த தொழில்நுட்பம் வந்த பிறகு மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

26
அதிகரித்த காக்னிட்டிவ் டெப்ட் பிரச்சனை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மனிதர்களுக்கு காக்னிட்டிவ் டெப்ட் என்கிற பிரச்சனை அதிகரித்துள்ளது. காக்னிட்டிவ் டெத் என்பது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது குறித்து ஆராய்ந்தோ அல்லது சிந்தித்தோ தெரிந்து கொள்ளாமல் பதில் கிடைத்தால் போதும் என்கிற மனப்பான்மையுடன் தேடத் தொடங்குவது. அந்த விடை ஏன் வந்தது? எப்படி வந்தது? கேள்விக்கு விடை சரியானதுதானா? என்பது குறித்த எந்த யோசனையும் இல்லாமல் பதிலை மட்டுமே எதிர்நோக்கி இருக்கும் நிலைதான் காக்னிட்டிவ் டெப்ட் என்று அழைக்கப்படுகிறது. எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால் மூளைக்கு வேலை கொடுக்காமல் செயற்கை நுண்ணறிவை மட்டுமே நம்பி இருக்கும் நிலை.

36
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மனிதர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். முதல் குழுவில் சுயமாக யோசித்து எழுதுபவர்களையும், இரண்டாவது குழுவில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எழுதுபவர்களையும், மூன்றாவது குழுவில் தேவைக்கு மட்டும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துபவர்களும் பிரிக்கப்பட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு மட்டுமே பயன்படுத்தியவர்களுக்கு காக்னிட்டிவ் டெப்ட் பிரச்சினை அதிகரித்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மூளை செயல்பாடுகளை இசிஜி மூலம் சோதித்து பார்த்ததில் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. நாம் ஒரு விஷயத்தை சிந்திக்கும் பொழுது மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையே இணைப்பு மற்றும் புரதங்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக நினைவாற்றல், கற்பனை திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை அதிகரிக்கும்.

46
மூளையில் நடக்கும் மாற்றங்கள்

அதேசமயம் நாம் சிந்திக்காமல் முழுவதுமாக செயற்கை நுண்ணறிவை மட்டுமே நாடி இருக்கும் பொழுது இந்த நியூரான்களுக்கு இடையேயான இணைப்பு மற்றும் புரதங்கள் உருவாவது அதிகரிக்காது. இதன் காரணமாக நினைவாற்றல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவை மட்டுமே பயன்படுத்தி எழுதியவர்களுக்கு அது குறித்து கேட்கும் பொழுது அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை கூட அவர்களால் நினைவில் கொள்ள முடியாத நிலை இருந்தது. அதே சமயத்தில் சுயமாக எழுதியவர்களுக்கு தான் என்ன எழுதினோம் என்பதையும் அது குறித்த கேள்விகளுக்கு 100% அவர்களால் பதில் அளிக்க முடிந்தது. அவர்களுடைய நினைவாற்றலும் நன்றாக இருந்தது. நம் மூளையானது ஒன்றை படிக்கும் பொழுது அதை பதிவு செய்து கொள்ளும். அதை சிந்திக்கும் பொழுது இரண்டு மூன்று சுழற்சிக்கு பின்னர் நம் நினைவிற்கு அனுப்பும்.

56
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் போது மூளை வேலை செய்யப்படாததால் மூளையில் பதிவதற்கோ அது நினைவாற்றலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த காலத்தில் குழந்தைகள் வீட்டுப் பாடங்களை கூட செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செய்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடுகள் ஏற்படுகிறது. வீட்டுப்பாடம் என்பது பள்ளியில் படித்ததை மறுபடியும் யோசித்து, அது குறித்து சிந்தனை செய்து, ரீ கால் செய்வதற்கு தான். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் வீட்டு படங்கள் செய்யும் பொழுது குழந்தைகள் யோசிக்கும் திறனை முற்றிலும் இழக்கின்றனர். இதன் காரணமாக நினைவாற்றல் குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

66
மூளைக்கு முதலில் வேலை கொடுங்கள்

எந்த தொழில் நுட்பமாக இருந்தாலும் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அது நன்மையா? தீமையா? என்று முடிவு செய்யப்படும். செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான். அதிலிருந்து பல தகவல்களை பெற முடியும். ஆனால் யோசிப்பதற்கே நேரம் கொடுக்காமல் செயற்கை நுண்ணறிவை மட்டுமே சார்ந்து இருப்பது தவறான செயலாகும். ஒரு தகவல்களை பெறுவதற்கு முன்பு அது குறித்து யோசித்து சுயமாக சிந்தித்து ஆராய்ந்து விடைபெற முயற்சிக்க வேண்டும். ஒரு அடிப்படை கட்டமைப்பை அமைத்த பின்னர் செயற்கை நுண்ணறிவை நாடி அந்த தகவல்களை மெருகேற்றிக் கொள்ளலாம் இப்படி செய்தால் சுய சிந்தனை வளர்வதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறந்த தகவல்களை நம்மால் பெற முடியும். எனவே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories