Tea Leaf Hacks : டீ போட்ட பின் டீத்தூளை குப்பையில் போடாதீங்க.. அதை இப்படி யூஸ் பண்ணுங்க

Published : Aug 04, 2025, 12:06 PM IST

பயன்படுத்திய தேயிலை இலைகளை குப்பையில் போடுவதற்கு பதிலாக அதை பல வழிகளில் மீண்டும் பயன்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

PREV
15
Reusing Tea Leaves

நம் பெரும்பாலானோருக்கு டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் தினமும் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் காலை மாலை டீ போடுவது வழக்கம். அதுபோல டீ தயாரித்த பிறகு தேயிலை இலைகளை குப்பையில் தூக்கி எறிவதும் வழக்கம். நீங்களும் இதேமாதிரி தான் செய்றீங்களா? ஆம் என்றால், இனி அப்படி செய்யாதீங்க. ஏனென்றால் பயன்படுத்திய தேயிலை இலைகளை மீண்டும் பல வழிகளில் பயன்படுத்தலாம் தெரியுமா? அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
எண்ணெய் கறைகளை நீக்க :

கிச்சனில் இருக்கும் பாத்திரங்கள் அல்லது பொருட்கள் மீது படிந்திருக்கும் எண்ணெய் கறைகளை நீக்க பயன்படுத்திய தேயிலையை இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். அடுத்ததாக பாத்திரம் கழுவும் லிக்விட்டை இதனுடன் சேர்த்து பாத்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சூடான நீரால் பாத்திரத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் பாத்திரத்தில் படிந்திருக்கும் விடாப்பிடியான எண்ணெய் கறை முற்றிலும் நீங்கிவிடும். பாத்திரமும் பளபளக்கும்.

35
நான் ஸ்டிக் பாத்திரங்கள்

நான் ஸ்டிக் பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகளை பயன்படுத்தலாம். இதற்கு தேயிலை இலைகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். இந்த தண்ணீரில் நான் ஸ்டிக் பாத்திரங்களை சில நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு பாத்திரம் கழுவும் லிக்விட் கொண்டு சுத்தம் செய்தால் அதில் படிந்துள்ள கிரீஸ் மற்றும் துர்நாற்றம் நீங்கிவிடும்.

45
பிரிட்ஜில் துர்நாற்றம் நீங்க

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். இதனால் பிரிட்ஜில் துர்நாற்றம் அடித்தால் பயன்படுத்திய தேயிலையை ஒருமுறை தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். இப்போது ஒரு கிண்ணத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் தேயிலைகள், பேக்கிங் சோடா, எலுமிச்சை துண்டு ஆகியவற்றை சேர்த்து ஃப்ரிட்ஜில் உள்ளே வைத்தால், பிரிட்ஜில் துர்நாற்றம் அடிக்காது.

55
செடிகளில் இருக்கும் பூச்சிகளை விரட்ட

பயன்படுத்திய தேயிலை இலைகளை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து பிறகு ஆற வைத்து அந்த தண்ணீரை செடிகள் மீது தெளித்தால் பூச்சிகள் தங்காது. மண்ணின் தரமும் மேம்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories